SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

12.வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று,வினையெச்சம் வினையாலனையும் பெயர்,தொழிற்பெயர் உருவாக்குதல்

வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று,வினையெச்சம் வினையாலனையும் பெயர்,தொழிற்பெயர் உருவாக்குதல்
31.கொல் என்ற வேர்ச்சொல்லின் வினை யெச்சம் தருக
அ)கொன்று
ஆ)கொல்லும்
இ)கொல்வான்
ஈ)கொன்றது
விடை : அ)கொன்று

32.வேர்ச்சொல்லை பெண்பால் எதிர்கால வினைமுற்றாக்குக : வா
அ)வருதல்
ஆ)வந்தாள்
இ)வருவாள்
ஈ)வருகிறாள்
விடை : இ)வருவாள்

33.வேர்ச்சொல்லின் இருந்து வினையெச்சம் காண்க : மகிழ்
அ)மகிழ்வாய்
ஆ)மகிழ்ந்தாய்
இ)மகிழ்ந்தான்
ஈ)மகிழ்ந்து
விடை : ஈ)மகிழ்ந்து

34.நீக்கு என்னும் வேர்ச்சொல்லின் தொழிற் பெயர் வடிவம்
அ)நீக்கிய
ஆ)நீக்கும்
இ)நீக்குதல்
ஈ)நீக்க
விடை : இ)நீக்குதல்

35.குனி என்ற வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம்
அ)குனியும்
ஆ)குனிந்து
இ)குனிந்த
ஈ)குனிந்தது
விடை : ஆ)குனிந்து

36.விடு என்ற வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம்
அ)விட்டான்
ஆ)விட்டு
இ)விட்டது
ஈ)விடான்
விடை : ஆ)விட்டு

37.மற என்பதன் தொழிற்பெயர்
அ)மறந்து
ஆ)மறைந்து
இ)மறத்தல்
ஈ)மறந்தால்
விடை : இ)மறத்தல்

38.சரி என்ற வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக
அ)சிரித்தான்
ஆ)சிரித்து
இ)சிரிக்க
ஈ)சிரிப்பு
விடை : ஆ)சிரித்து

39.மொழி என்ற வெர்ச்சொல்லின் எதிர்மறை வினைமுற்று தருக
அ)மொழிவான்
ஆ)மொழியா
இ)மொழிந்திலன்
ஈ)மொழிதல்
விடை : இ)மொழிந்திலன்

40.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக உருள்
அ)உருள்க
ஆ)உருண்டு
இ)உருண்ட
ஈ)உருண்டது
விடை : ஆ)உருண்டு



No comments:

Post a Comment