21. கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி தலைமை ஆளுநர்?
விடை : கானிங் பிரபு
22. இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் பொது கல்வித் துறையை உருவாக்கியவர்?
விடை : டல்கௌசி பிரபு
23. ஜெனரல் ஸ்வார்டு பங்கேற்ற போர்?
விடை : நான்காம் மைசூர் போர்
24. இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்ட ஆண்டு?
விடை : 1835
25. மீரட் பகுதியில் கலகத்தில் ஈடுபட்ட புரட்சிக்காரர்கள் அங்கிருந்து புறப்பட்டு கீழ்க்கண்ட எந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்?
விடை : தில்லி
26. காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது இந்தியாவின் வைசிராய்
விடை : டஃப்ரின் பிரபு
27. முதல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்
விடை : 78
28. மங்க்ள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்
விடை : பேரக்பூர்
29. இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்?
விடை : ரங்கூன்
30. விக்டோரியா பேரரசியின் மகாசாஸன அறிக்கை படிக்கப்பட்ட இடம்
விடை : அலகாபாத்
31. மாகாண சட்டமன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
விடை : 1861
32. காங்கிரசில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்த ஆண்டு
விடை : 1916
33. வந்தவாசி வீரன் என்று அழைக்கப்படுபவர்
விடை : சர் அயர் கூட்
34. சைமன் குழு வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தி உயிரிழந்தவர்
விடை : லாலா லஜபதி ராய்
35. வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தது
விடை : 1921 நவம்பர்
36. 1612ல் ஆங்கிலேயர் எங்கு தங்களது முதல் தொழிற்சாலையை நிறுவினர்?
விடை : சூரத்
37. இந்தியாவில் தபால் தலைகளை அறிமுகப்படுத்தியது யார்?
விடை : டல்ஹவுசி
38. அன்னி பெசண்ட் அம்மையார் எதோடு தொடர்புடையவர்?
விடை : தியாசபிகல் இயக்கம்
39. சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கியது யார்?
விடை : ஈ.வெ.ரா. பெரியார்
40. இந்தியாவின் முதல் தேசியக் கவி என அழைக்கப்படுபவர் யார்?
விடை : ஹென்றி விவியன் டிரெசியோ
No comments:
Post a Comment