141. * சமூகத்தின் கடைசி நிலையில் வைக்கப்பட்ட சூத்திரர்களான சிசுநாகர், மகாபத்மநந்தன் மகதத்தை ஆண்டனர்.
142. * நந்த வம்சத்துப் பேரரசர்கள் போற்றிய மதம் - சமண மதம்
143. * நந்த வம்சத்தின் கடைசி அரசர் - தனநந்தர்
144. * தனநந்தனை போரில் வென்று மகதத்தை கைப்பற்றியவர் - சந்திரகுப்த மெளரியர்
145. * சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவினார்.
146. * சந்திரகுப்தர் வென்ற கிரேக்க மன்னன் - செலூகஸ் நிகேடார்
147. * செலூகஸின் நிகேடாரின் தூதுவர் - மெகஸ்தனிஸ்
148. * மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா
149. * சந்திரகுப்த மெளரியர் ஆட்சியை துறந்து சமன மதத்திற்கு மாறி துறவியானார்.
150. * சந்திரகுப்த மெளரியர் பத்திரபாகு சமண துறவியுடன் சிரவணபெலகொலா சென்று தவமிருந்து உயிர்நீத்தார்.
151. * சந்திரகுப்த மெளரியரின் மகன் - பிந்துசாரர்
152. * பிந்துசாரர் 25 ஆண்டுகள் ஆட்சி ஆண்டார்.
153. * பிந்துசாரருக்கு பிறகு அவரது மகன் அசோகர் ஆட்சி பொறுப்பேற்றார்.
154. * அசோகரின் ஆட்சியின் காலக்கட்டம் - கி.மு.273-236
155. * கலிங்கநாட்டு போர் அசோகரை பெளத்த மதத்திற்கு மாற்றியது.
156. * இந்தியாவில் முதன்முதலில் மக்கள் நலஅரசை உருவாக்கியவர் - அசோகர்
157. * அசோகர் மக்களுக்கு உதவுவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் எனப்பட்ட சிறப்பு பணியாளர்களை நியமித்தார்.
158. * படையெடுத்துப்போர் செய்து வெற்றி பெறும் திக் விஜயத்தை வெறுத்தார்.
159. * அசோகர் பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பெளத்த மாநாட்டை கூட்டினார்.
160. * அசோகர் தனது மகனான மகேந்திரனை இலங்கைக்கு பெளத்த மதத்தைப் பரப்புவதற்கு அனுப்பினார்.
No comments:
Post a Comment