SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 23, 2016

11.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
201. அலாவுதீன் பாமன் ஷாவால் பாமினி அரசு நிறுவப்பட்ட    ஆண்டு எது?       கி.பி. 1347
202.  எந்த தில்லி சுல்தான் காலத்தில் பாமினி பேரரசு  உருவானது?   முகமது பின் துக்ளக்.
203. பாமினி பேரரசின் தலைநகர் எது? குல்பர்கா.
204. தலை நகரை "குல்பர்காவில்" இருந்து "பீடாருக்கு" மாற்றிய   பாமினி அரசர் யார்?அகமது வாலிஷா
205. பாமினி அரசை மொத்தம் எத்தனை சுல்தான்கள் ஆட்சி புரிந்தனர்?   14 சுல்தான்கள்
206. பாமினி அரசர்கள் அனைவரும் எந்த சமயத்தை    சார்ந்தவர்கள்?  இஸ்லாமிய சமயம்.
207. யாருடைய ஆட்சிக் காலத்;தில் பாமினி அரசு புகழின் உச்சிக்கு  சென்றதுமூன்றாம் முகம்மது ஷா
208. மூன்றாம் முகம்மது ஷாவின் திறமையான அமைச்சர் யார்?  முகமது கவான்.
209. முகமது கவான் பாமினி பேரரசில் பணிபுரிவதற்க்கு முன்பு அவர் செய்த தொழில் எது?  வாணிபம்.
210. முகமது கவானின் பூர்வீகம் எது?    பாரசீகம்.
211.  முகமது கவான் ————என்ற இடத்தில் ஒரு கல்லூரியை கட்டுவதற்;கு கொடை வழங்கினார். பீடாரில்.
212. பீடார் கல்லுரி ———— கலைப்பாணியில் கட்டப்பட்டது.           பாரசீகக் கட்டிடக் கலைப்பாணி
213. முகமது கவானுக்கு எதிராது சதித் திட்டம் தீட்டியவர்கள்     யார்?          தக்கணி உயர்குடியினர்.
214. முகமது கவானுக்கு மரணதண்டனை வழங்கியவர் யார்?    மூன்றாம் முகமது ஷா
215. ——ஆம் ஆண்டு வாக்கில் பாமினி அரசு ஐந்து சுகந்திர சுல்தானியமாக சிதறுண்டது. கி.பி. 1526.
216.  சிதறுண்ட ஐந்து பாமினி அரசுக்களும் எவ்வாறு  அழைக்கப்பட்டது?      தக்காண சுல்தானியங்கள்.
217.  அலாவுதீன் பாமன் ஷா ———— என்றும்   அழைக்கப்பட்டார்.       ஹசன் கங்கு.
218.அலாவுதீன அசன் பாமன் ஷா தன்னை யாருடைய   வழித்தோன்றலாககருதிக் கொண்டார்?    இரானிய அரசன் பாமன்.
219.  பாமினி பேரரசின் தலை நகரான குல்பர்கா தற்போது  எந்த மாநிலத்தில் உள்ளதுகர்நாடகம்  
220. அலாவுதீன் பாமன் ஷாவின் ஆட்சிக் காலம் என்ன? கி.பி. 1347 – 1358



No comments:

Post a Comment