TNPSC பொதுத்தமிழ்
11.'குடிமக்கள் காப்பியம்" என்று பெயர் பெற்ற நூல்
அ)மணிமேகலை
ஆ)சிலப்பதிகாரம்
இ)சீவகசிந்தாமணி
ஈ)சீறாப்புராணம்
விடை : ஆ)சிலப்பதிகாரம்
12.ஈன்ற வயிறொ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே
பாடலடிகள் இடம் பெற்றுள்ள நூல்
அ)அகநானூறு
ஆ)புறநானூறு
இ)குறுந்தொகை
ஈ)கலிங்கத்துப்பரணி
விடை : ஆ)புறநானூறு
13.பிரித்தெழுதுக - 'வெம்முனை"
அ)வெம்மை + முனை
ஆ)வெம்பல் + முனை
இ)வெம் + முனை
ஈ)வெம்பு + முனை
விடை : அ)வெம்மை + முனை
14.'பூம்புனல்" என்னும் சொhல் இவ்வாறு பிரியும்
அ)பூம் + புனல்
ஆ)பூம்பு + புனல்
இ)பூ + புனல்
ஈ)பூ + அனல்
விடை : இ)பூ + புனல்
15.பிரித்தெழுதுக - 'அச்செல்வம்"
அ)அச் + செல்வம்
ஆ)அச் + செல் + அம்
இ)அச்சு + செல்வம்
ஈ)அ + செல்வம்
விடை : ஈ)அ + செல்வம்
16.பைந்தமிழ் - எவ்வாறு பிரித்தல் வேண்டும்?
அ)பை + தமிழ்
ஆ)பைந்து + தமிழ்
இ)பைந் + தமிழ்
ஈ)பசுமை + தமிழ்
விடை : ஈ)பசுமை + தமிழ்
17.உவகை என்பதன் எதிர்ச்சொல்
அ)அழுகை
ஆ)மகிழ்ச்சி
இ)வெறுமை
ஈ)இன்பம்
விடை : அ)அழுகை
18.தண்மை எதிர்ச்சொல் எது?
அ)தட்பம்
ஆ)வெம்மை
இ)கொதித்தல்
ஈ)குளுமை
விடை : ஆ)வெம்மை
19.இல்லன - எதிர்ச்சொல் தேர்க
அ)உள்ளன
ஆ)நல்லன
இ)தீயன
ஈ)எளியன
விடை : அ)உள்ளன
20.எதிர்ச்சொல் எழுதுக - கேண்மை
அ)நட்பு
ஆ)உறவு
இ)இன்பம்
ஈ)பகைமை
விடை : ஈ)பகைமை
No comments:
Post a Comment