SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 24, 2016

10.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   ஐதராபாத் நிஜாமால் ஆர்காட்டின் நவாப்பாக  நியமிக்கப்பட்டவர் யார்?அன்வருதின்கான்
2.   முதல் கர்நாடகப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?   கி.பி.1746-1748
3.   கி.பி.1740-ல் ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய    வாரிசுமைப் போர் இந்தியாவில் நடைபெற்ற எந்த          கர்நாடக போருக்கு காரணமாக அமைந்தது?   முதல் கர்நாடகப் போர்
4.   இந்தியப் பகுதியில் இருந்த பிரெஞ்சு கப்பல்களை    கைப்பற்றிய ஆங்கில கடற்படை தளபதி யார்?        பார்னெட்டின்
5.   ஆங்கிலேயரின் சென்னை துறைமுகத்தை (ஜெயின்ட்   ஜார்ஜ் கோட்டை) கைப்பற்றிய பிரெஞ்சு ஆளுநர்கள் யார்?   பாண்டிச்சேரி ஆளுநர் டியூப்ளே மற்றும் மொரீஷியஸ்       ஆளுநர் லா பூர்டான்னாய்ஸ்.
6.   1746-ல் அன்வருதீன் மகன் மாபூஸ்கான்    தலைமையிலான கர்நாடகப் படையினை 
பிரெஞ்சுகாரர்கள் எந்த இடத்தில் தோற்கடித்தனர்?   ஆடையாற்றுக்கு அருகில் உள்ள சாந்தோம்
7.   பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர்களின் கடலூர்   டேவிட் கோட்டையை கைப்பற்ற சென்றபோது   அவர்களை தோற்கடித்த ஆங்கிலேய தளபதி யார்?   மேஜர் லாரன்ஸ்
8.   முதல் கர்நாடகப் போர் 1748-ல்  ..........உடன்படிக்கை படி முடிவுக்கு வந்தது.  அய்-லா-சாப்பேல்
9.   அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை படி  பிரெஞ்சுகாரர்களிடம் இருந்து ஆங்கிலேயர் எந்த பகுதியை திரும்ப பெற்றுனர்?   சென்னை
10.    அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை படி  ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுகாரர்கள் எந்த பகுதியை திரும்ப பெற்றனர்?          வடஅமெரிக்காவில் உள்ள லூயிஸ்பர்க்
11. இரண்டாம் கர்நாடகப் போர் நடைபெற்ற காலம் என்ன?       கி.பி. 1748-1754.
11. இரண்டாம் கர்நாடகப் போருக்கான காரணம் என்ன? ஐதராபாத் மற்றும் ஆற்காடு அரியனை போட்டி
12. ஐதராபாத் நிஜாமாக நிஜாம் உல் முல்க் மகன் நாசர்ஜங் பதவி ஏற்றதற்;கு எதிர்ப்பு தெரிவித்தவர் யார்? நிஜாமின் பேரன் முசபர் ஜங்
13. ஆற்காடு நவாப்பாக அன்வருதீன் பதவியேற்றதற்கு    எதிர்ப்பு தெரிவித்தவர் யார்?
தோஸ்த் அலிமருமகன் சந்தாசாகிப்
14. ஐதராபாத் ஆற்காடு அரியணை போட்டியில்பிரெஞ்சுகாரர்களின் உதவியை நாடியவர்கள் யார் யார்?    சந்தாசாகிப், முசாபர் சங்
15. ஐதராபாத் ஆற்காடு அரியணை போட்டியில் ஆங்கிலேயர்களின் உதவியை நாடியவர்கள் யார் யார்?  அன்வருதின்இ நாசர் சங்
16. சந்தாசாகிப்இ முசாபர்சங் மற்றும் பிரெஞ்சு கூட்டுப்படை   அன்வருதினை எந்த இடத்தில் நடைபெற்றப் போரில்     தோற்கடித்தனர்?   ஆம்பூர்
17. அன்வருதீன் எந்தப் போரில் இறந்தார்?      ஆம்பூர்
18. திருச்சி கோட்டையில் தஞ்சம் புகுந்த அன்வருதீன்    மகன் முகமது அலி யாருடைய உதவியை நாடினார்?   ஆங்கிலேயர்
19. ஆர்காடு நவாப் சந்தாசாகிப்பிற்குஇ பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே உதவி செய்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட        பகுதிகள்  எவை எவை?        வழுதானூர்இ வில்லியனூர் மற்றும் பர்கூர்
20. ஆற்காட்டை (சந்தாசாகிப்பை) ஆங்கிலேய படை தாக்குவதற்;கு அனுமதி வழங்கிய கவர்னர் யார்?       சான்டர்ஸ்



No comments:

Post a Comment