41. # வரித்தசை நார்களின் மேலுறை – சார்கோலெம்மா எனப்படும்.
42. # தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் உயிரிகள் – உற்பத்தியாளர்கள் எனப்படும்.
43. # அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம்-சூரியன்
44. # உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை – தாவரங்கள்
45. # நரம்பு திசுவின் உடல் பகுதி – சைட்டான் எனப்படும்.
46. # ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி – O இரத்தத்தொகுதி
47. # எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள்-ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா
48. # முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது – கத்தரி
49. # பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை – சென்ட்ரோலெசித்தல்
50. # முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் – பாம்பு
51. # இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் – கழுகு
52. # பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் – பாஸ்விடின், லிப்போ விட்டலின்
53. # கோலன்கைமா திசுவில் காணப்படுவது – பெக்டின்
54. # தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.
55. # புளோயம் ஒரு கூட்டு திசு
56. # வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.
57. # தாவர உடலத்தின் புறத்தோல் செல்களின் மீது காணப்படும் மெழுகுப் பொருள் – கியுட்டிக்கிள்
58. # நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.
59. # பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.
60. # கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.
No comments:
Post a Comment