SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

50.tamil material

981. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்:
982. * செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடலை எழுதியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
983. * பிறந்த ஊர் - பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான்காடு.
984. * காலம்: 13.04.1930 - 08.10.1959
985. * மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் - பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.
986. * தனது பாடல்களில் பொதுவுடைமைச் சிந்தனைகளை கூறியுள்ளார்.
987. * சில பாடல் வரிகள்:
செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்
"பயிரை வளர்த்தால் பலனாகும் - அது
உயிரைக் காக்கும் உணவாகும்"
"காயும் ஒரு நாள் கனியாகும் -நம்
கனவும் ஒரு நாள் நனவாகும்"
புறநானூறு:
988. * புறநானூறு = புறம் + நான்கு + நூறு.
989. * தமிழர்களின் வரலாறு பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூல்.
990. * இந்நூல் புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.
991. * அதியமானின் நண்பர் - ஔவையார்.
992. * சங்கப்புலவர்களில் ஒருவர் - ஒளவையார்.
993. * நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் - ஔவையார்.
994. சங்ககால பெண் கவிஞர்களில் அதிகப்பாடல் பாடியவர் - இவரும் ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் வேறுவேறானவர்.
995. * ஔவை என்பதன் பொருள் - தாய்.
996. பாடல் வரிகள்:
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே - ஔவையார்
997. ** பொருள்: அவல் - பள்ளம், மிசை - மேடு, நல்லை - நன்றாக இருப்பாய்.
998. * திண்ணையை இடித்து தெருவாக்கு என்ற பாடலை இயற்றியவர் - கவிஞர் தாராபாரதி. இவர் எழுச்சிமிக்க கவிதைகளை எழுதுவதில் வல்லவர். ஆசிரியராக பணியாற்றியவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்றவர்.
999. * காலம்: 26.02.1947 - 13.05.2000
1000.* பிற நூல்கள்: புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள்.




No comments:

Post a Comment