SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

50. 7-ஆம் வகுப்பு | தமிழ்

491.    7-ஆம் வகுப்பு | தமிழ் |ஏழாம் வேற்றுமை உருபுகள் எவை?
கண், உள், மேல், கீழ்
492. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    எட்டாம் வேற்றுமைக்கு உருபு உண்டா?
இல்லை
493. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    எட்டாம் வேற்றுமையை எவ்வாறு அழைப்பர்?
விளிவேற்றுமை
494.    7-ஆம் வகுப்பு | தமிழ் |பலவகைப்பட்டதாக இருக்கும் ஒரு பொருளைப் பொதுவாகச் சுட்டும் பொழுது அதன் வகை குறித்து ஐயம் ஏற்படலாம். எனவே அவற்றை இனம் பிரித்துக் காட்டுவதற்காகப் பயன்படுத்தும் சொல்லுக்கு பெயர் என்ன?
அடைமொழி
495.    7-ஆம் வகுப்பு | தமிழ் |பொருட்களை இனம்பிரித்தறிய உதவும் அடைமொழிகள் ______ எனப்படும்.
இனமுள்ள அடைமொழி
496.    7-ஆம் வகுப்பு | தமிழ் |களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா முதலியன எதனுடைய வேறு பெயர்கள்?
யானை.
497.    7-ஆம் வகுப்பு | தமிழ் |தனிப்பாடலின் ஆசிரியர் யார்?
அந்தகக்கவி வீரராகவர்
498.    7-ஆம் வகுப்பு | தமிழ் |அந்தகக்கவி வீரராகவர் எங்கு பிறந்தார்?
காஞ்சிபுரம் மாவட்டம் பூதூரில் பிறந்து, பொன்விளைந்த களத்தூரில் வாழ்ந்தார்.
499.    7-ஆம் வகுப்பு | தமிழ் |அந்தகக்கவி வீரராகவரின் தந்தை பெயர் என்ன?
வடுகநாதர்
500.    7-ஆம் வகுப்பு | தமிழ் |சீட்டுக்கவி பாடுவதிலும் நகைச்சுவை ததும்பப் பாடல் இயற்றுவதிலும் வல்லவர் யார்?
அந்தகக்கவி வீரராகவர்
501.    7-ஆம் வகுப்பு | தமிழ் |சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்றப் புராணம் ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
அந்தகக்கவி வீரராகவர்
502.    7-ஆம் வகுப்பு | தமிழ் |தனிப்பாடல் திரட்டு பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
110
503. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    110 - புலவர்கள் எத்தனை தனிப்பாடல்களை பாடியுள்ளார்?
1113 தனிப்பாடல்கள்
504.    7-ஆம் வகுப்பு | தமிழ் |அந்தகக்கவி வீரராகவர் எந்த காலத்தை சேர்ந்தவர்?
கி.பி. பதினேழாம் நூற்றாண்டு
505.    7-ஆம் வகுப்பு | தமிழ் |அறிஞர் அண்ணா அவர்களால் "தமிழகத்தின் அன்னிபெசண்ட்" என அழைக்கப்பட்டவர் யார்?
மூவலூர் இராமாமிர்தம்
506.    7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமாமிர்தம் பிறந்த ஆண்டு எது?
கி.பி.1883-ஆம் ஆண்டு.
507.    7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமாமிர்தம் அம்மையாரின் தந்தை பெயர் என்ன?
கிருஷ்ணசாமி
508.    7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமாமிர்தம் அம்மையார் யாரை திருமணம் செய்து கொண்டார்?
சுயம்பு
509.    7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமாமிர்தம் தமது முதல் போராட்டத்தை எங்கு தொடங்கினார்?
1917-ஆம் ஆண்டு மயிலாடுதுறையில்
510.    7-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி.1938-ஆம் ஆண்டு மொழிப்போர் பேரணியில் உறையூர் (திருச்சி) முதல் சென்னை வரை நாற்பத்திரண்டு நாள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எத்தனை மைல்களை நடைபயணமாக கடந்தார்?
577 மைல்கள்



No comments:

Post a Comment