61.மரபுப் பிழைகளை நீக்குக
அ)பன்றி உறுமும்
ஆ)பன்றி கத்தும்
இ)பன்றி முரலும்
ஈ)பன்றி பிளிறும்
62.மரபுப் பிழையற்ற்தொடரைத் தேர்க
அ)பனங்காட்டில் புலி உறுமிற்று
ஆ)பனந்தோப்பில் புலி உறுமிற்று
இ)பனங்காட்டில் புலி பிளிறிற்று
ஈ)பனந்தோப்பில் புலி முழங்கிற்று
63.பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது?
அ)போலீஸ் ஸ்டேஷனில் ரிப்போர்ட்டு கொடுத்தேன்
ஆ)போலீஸ் நிலையத்தில் ரிப்போர்ட்டு கொடுத்தேன்
இ)போலீஸ் ஸ்டேஷனில் தகவல் கொடுத்தேன்
ஈ)காவல் நிலையத்தில் புகார் மனுக் கொடுத்தேன்
64.பிறமொழிச் சொற்களை நீக்குக
'எனக்குக் சென்ற வருஷம் கல்யாணம் நடந்தது"
அ)எனக்குச் சென்ற வருஷம் கல்யாணம் நடந்தது
ஆ)எனக்குச் சென்ற ஆண்டு திருமணம் நடந்தது
இ)எனக்குச் சென்ற வருடம் திருமணம் நடந்தது
ஈ)எனக்குச் சென்ற ஆண்டு கல்யாணம் நடந்தது
65.பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் காண்க
'இண்டர்வியூ"
அ)பேட்டி
ஆ)நேர்காணல்
இ)நேர்முகம்
ஈ)நேருக்கு நேர்
66.பின்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களைக் கண்டு எழுதுக
'பவர் கட் ஆனதால் படிப்பெல்லாம் வேஸ்ட் ஆனது"
அ)மின்சாரம் துண்டானதால் படிப்பெல்லாம் வீணானது
ஆ)மீன் தடை ஏற்பட்டதால் படிப்பெல்லாம் பாழானது
இ)மின் தடை ஏற்பட்டதால் படிப்பெல்லாம் வீணானது
ஈ)மின் தடையினால் படிப்பெல்லாம் பாழாயினது
67.ஆங்கில சொல்லலுக்கு நிகரான தமிழ்ச் சொல் கண்டுபிடி புழஎடிநசnஅநவெ குடைந (கவர்மென்ட் பைல் )
அ)அரசாங்க அறிக்கை
ஆ)அரசுக் கட்டு
இ)அரசு ஒப்புகை
ஈ)அரசுக் கோப்பு
68.பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் குறி
'ஹெவி வெகிகிள்ஸ் லைசென்ஸ்"
அ)கன ஊர்திச் சான்று
ஆ)கனராக ஊர்தி சர்டிபிகேட்
இ)கனரக ஊர்திகள் உரிமம்
ஈ)கன ஊர்திப் பத்திரம்
69.ஆங்கிலச சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் அறிக
யுஅடியளளயனழச(அம்பாசிடர்)
அ)அலுவலர்
ஆ)தூதரகம்
இ)அமைச்சர்
ஈ)தூதர்
70.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
விலை விழை வினை
அ)பணம் பார் செய்
ஆ)ரூபாய் முயற்சி தயாரி
இ)காசு நேசி பண்
ஈ)மதிப்பு விருப்பு உற்பத்தி
71.தொடரும் தொடர்பும் அறிதல்
'கல்வித் தந்தை " என அனைவராலும் அழைக்கப்படுபவர் யார்?
அ)தேவநேயப் பாவாணர்
ஆ)நெ.து.சுந்தரவடிவேலு
இ)கி.ஆ,பெ விசுவநாதம்
ஈ)அறிஞர் அண்ணா
72.இத்தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
சிறுகதை மன்னன்- என்று அழைக்கப்படுபவர்
அ)கல்கி
ஆ)புதுமைப்பித்தன்
இ)கண்ணதாசன்
ஈ)ஜெயகாந்தன்
73.'குட்டித் திருவாசகம்" என்று அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்
அ)திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
ஆ)திருப்புகழ்
இ)திரவருட்பா
ஈ)திருமந்திரம்
74.இரட்டைக் காப்பியம் என்பவை
அ)சிலப்பதிகாரம் ,மணிமேகலை
ஆ)மணிமேகலை,குண்டலகேசி
இ)வளையாபதி,சீவகசிந்தாமணி
ஈ)சிலப்பதிகாரம்,சீவகசிந்தாமணி
75.'நெடுந்தொகை " என்று குறிக்கப்படும் நூல்
அ)கம்பராமாயணம்
ஆ)புறநானூறு
இ)சிலப்பதிகாரம்
ஈ)அகநானூறு
76.பிரித்தெழுதுக 'கொள்ளளவு"
அ)கொள்ள் + அளவு
ஆ)கொள் + அளவு
இ)கொள் + ளளவு
ஈ)கொள்ள + அளவு
77.பிரித்தெழுதுக :"அழகாடை"
அ)அழகு+ காடை
ஆ)அழூ காடை
இ)அ + காடை
ஈ)அழகு + ஆடை
78.பிரித்தெழுதுக 'மஞ்சட் கழுத்து"
அ)மஞ்சம் + கழுத்து
ஆ)மஞ்சட் + கழுத்து
இ)மஞ்சள் + கழுத்து
ஈ)மஞ்சூ கழுத்து
79.பிரித்தெழுதுக 'நம்மூர்" என்ற சொல் என்ற சொல் எவ்வாறு பிரியும்?
அ)நன் + ஊர்
ஆ)நன்மை + ஊர்
இ)நல் + ஊர்
ஈ)நம் + ஊர்
80.பிரித்தெழுதுக:'புறந்தூய்மை"
அ)புறம் + தூய்மை
ஆ)புறன் + தூய்மை
இ)புறண் + தூய்மை
ஈ)புறந் + தூய்மை
No comments:
Post a Comment