961. # மிட்ரல்வால்வு இடதுஆரிக்கிள், இடது வெண்ட்ரிக்கிள் இடையில் காணப்படுகிறது.
962. # ஈரிதழ் மற்றும் மூவிதழ் வால்வின் பயன்: இரத்தம் பின்னோக்கிச் செல்வதைத் தடுத்தல்.
963. # கார்டியாக் தசையினால் மனித இதயம் சுருங்கி விரிகிறது.
964. # சராசரி மனிதனின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்புகளாகும்.
965. # இதயத்தின் அறை சுருங்கும் நிலை – சிஸ்டோல்
966. # இதயத்தின் அறை விரிவடையும் நிலை – டயஸ்டோல்
967. # நீரினால் உண்டாகும் நோய் – டைபாய்டு, காலரா, சீதபேதி
968. # படிந்த மற்றும் மிதக்கும் பொருட்களை எந்த சுத்திகரிப்பு முறையில் நீக்கலாம் – முதல் நிலை சுத்திகரிப்பு
969. # நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.
970. # பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.
971. # கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.
972. # சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு – புளோயம்
973. # குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் – பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
974. # சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் – பெக்மென் சாதனம்
975. # கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் – சோடியம் கார்பனேட்
976. # தீயின் எதிரி என அழைக்கப்படுவது – கார்பன் டை ஆக்சைடு
977. # போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம்-பாரிஸ் சாந்து
978. # அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் – வினிகர்
979. # கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் – அசிட்டோன்
980. # 40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர்-பார்மலின்
No comments:
Post a Comment