SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

48.tamil material

41.'காலைக் கதிரவன் கடலில் தோன்றும் காட்சி எவ்வளவு அழகானது" - இது வாக்கியம்?
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்

42.எவ்வகை வாக்கியம் என அறிக
பசியும் பிணியும் நீங்குக
வசியும் வளனும் சுரக்க
அ)செய்தி  வாக்கியம்
ஆ)விழைவு வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்

43.எவ்வகை வாக்கியம் எனக் கண்டு எழுதுக
'பூங்கொடி கட்டுரை எழுதுகிறாள்"
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)தனி வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்

44.பிறவினை வாக்கியத்தைக் கண்டெழுதுக
அ)முதலமைச்சர் அறிவொளி இயக்கத்தைத் தொடங்கினார்
ஆ)திருவள்ளுவரின் பெருமையை அனைவரும் அறிவர்
இ)முதலவர்  அவர்கள் சமத்துவபுரத்தைத் திறந்து வைத்தார்
ஈ)முருகன் திருக்குறளைக் கற்பித்தான்

45.தன்வினை வாக்கியத்தைக் கண்டு எழுதுதல்
அ)பாண்டியன் கோவலனைக் கொல்வித்தான்
ஆ)குமரன் பாடத்தைக் கற்பிக்கிறான்
இ)அசோகர் புத்த மதத்தைப் பரப்பினார்
ஈ)அரசன் மாளிகையைக் கட்டுவித்தான்

46.கீழ்க்காணும் சொற்களும் பிறவினைச் சொல் எது எனக் கண்டறிக
அ)உண்டாள்
ஆ)உண்பாள்
இ)உண்டனர்
ஈ)உண்பித்தாள்

47.அரசன் வரியைக் குறதை;தான் - செயப்பாட்டு வினையாக்குக
அ)அரசனால் வரி குறையும்
ஆ)வரி அரசனால் குறையும்
இ)வரி அரசனால் குறைந்தது
ஈ)வரி அரசனால் குறைக்கப்பட்டது

48. அம்மா உணவு சமைப்பித்தாள் - தன்வினையாக்குக
அ)அம்மவால் உணவு சமைக்கப்பட்டது
ஆ)அம்மா உணவு சமைத்தாள்
இ)உணவை அம்மா சமைக்கிறாள்
ஈ)அம்மா உணவை சமைப்பிப்பாள்

49.திருக்குறள் மாணவர்களால் எழுதப்படும் செய்வினையாக்கு
அ)மாணவர்கள் திருக்குறளை எழுதுவர்
ஆ)மாணவர்கள் திருக்குறளை எழுதிகின்றனர்
இ)மாணவர்கள் திருக்குறளை எழுதினர்
ஈ)மாணவர்களால் திருக்குறள் எழுதப்பட்டது

50.உவமை விளக்கும் பொருள் காண்க
'தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுவது போல"
அ)பாசம்
ஆ)கவலை
இ)வஞ்சனை
ஈ)அமைதி

51.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக : 'பற்று"
அ)பற்றுதல்
ஆ)பற்றி
இ)பற்றினார்
ஈ)பற்றினவர்

52.'விழு" என்பதன் வினையெச்சம்
அ)விழுந்து
ஆ)விழுந்த
இ)விழும்
ஈ)விழுந்தான்

53.கீழ் உள்ள சொற்களை அகர வரிசையில் காண்க
அ)தெய்வம் ஞாயிறு ,தேர்,ஞாயிறு
ஆ)ஞிமிறு,தேர்,தெய்வம்,ஞாயிறு
இ)தேர்,தெய்வம்,ஞிமிறு,ஞாயிறு
ஈ)ஞாயிறு,ஞிமிறு,தெய்வம்,தேர்

54.அகர வரிசையில் உள்ள சொற்களைத் தேர்ந்தெடு
அ)நடு,நில்,நீலம்,நாடு
ஆ)நாடு,நீலம்,நீல்,நடு
இ)நடு,நாடு,நில்,நீலம்
ஈ)நீலம்,நில்,நாடு,நடு.

55.கீழ் உள்ள சொற்களை அகர விரிசைப்படி தேர்க
அ)கப்பல்,கெண்டி,கூற்தல்,கிள்ளை
ஆ)கப்பல்,கிள்ளை,கெண்டி,கூந்தல்
இ)கிள்ளை,கொண்டி,கப்பல்,கூந்தல்
ஈ)கப்பல்,கிள்ளை,கூந்தல்,கெண்டி

56.சொற்களை அகர வரிசைப்படித் தேர்வு செய்க
அ)சூழல்,சத்துணவு,சீருடை,சிறப்பு
ஆ)சத்துணவு,சூழல்,சிறப்பு,சீறுடை
இ)சீருடை,சிறப்பு,சத்துணவு,சூழல்
ஈ)சத்துணவு,சிறப்பு,சீருடை,சூழல்.

57.அகர வரிசைப்படி சொற்களை நீர் செய்க
அ)நாள்,வாரம்,ஆண்டு,மாதம்
ஆ)ஆண்டு,நாள்,மாதம்,வாரம்
இ)நாள்,வாரம்,மாதம்,ஆண்டு
ஈ)ஆண்டு,மாதம்,நாள்,வாரம்.

58.சொற்கள் ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்க
அ)கெடு வினையும் குற்றம் செய்தவர்க்கு
ஆ)வினையும் கேடு குற்றம் சேய்தவர்க்கு
இ)குற்றம் செய்தவர்க்கு கேடு விளையும்
ஈ)கேடு குற்றம் செய்தவர்க்கு விளையும்

59.சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடர் தேர்க
அ)உயர்ந்த குறிக்கோள் இருக்க வேண்டும் வாழ்க்கையில் நமக்கு
ஆ)வாழ்க்கையில் வேண்டும் இருக்க குறிக்கோள் நமக்கு உயர்ந்த
இ)குறிக்கோள் வாழ்கையில் நமக்கு உயர்ந்த இருக்க வேண்டும்
ஈ)நமக்கு வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் இருக்க வேண்டும்

60.சொற்களை ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்ட தொடர் யாது?
அ)கடைக்குச் சென்று வாங்கிவர வேண்டும் புத்தகம்
ஆ)புத்தகம் கடைக்குச் சென்று வாங்கி வர வேண்டும்
இ)கடைக்குச் சென்று புத்தகம் வாங்கி வர வேண்டும்
ஈ)வாங்கி வர வேண்டும் புத்தகம் கடைக்குச் சென்று.



No comments:

Post a Comment