SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

46.tamil material

1.'மாவீரன்" - இலக்கணக் குறிப்பு காண்க.
அ)உவமைத் தொடர்
ஆ)உருவகத்தொடர்
இ)அடுக்குத் தொடர்
ஈ)உரிச் சொற்றொடர்

2.'நாறாமலர்"-இலக்கணக் குறிப்பு தருக
அ)பண்புத்தொகை
ஆ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ)பெயரெச்சம்
ஈ)உவமைத்தொகை

3.'பெற்ற"- இலக்கணக் குறிப்பு தேர்க
அ)வினையெச்சம்
ஆ)வினைமுற்று
இ)பெயரெச்சம்
ஈ)வினைத்தொகை

4.இலக்கணக் குறிப்பு எழுதுக:'நெடும்படை"
அ)உவமைத் தொகை
ஆ)பண்புத்தொகை
இ)வினைத்தொகை
ஈ)எண்ணும்மை

5.'இரண்டும்"- இலக்கணக் குறிப்பு தருக
அ)எண்ணும்மை
ஆ)முற்றும்மை
இ)உயர்வு சிறப்பும்மை
ஈ)இழிவு சிறப்பும்மை

6.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
'கல்வி நமக்கு செம்மையான வழியைக் காட்டும்"
அ)கல்வி எதனைக் குறிக்கிறது
ஆ)கல்வி நமக்கு வழிகாட்டுமா?
இ)கல்வி எப்படி வழிகாட்டும்?
ஈ)கல்வி நமக்கு எவ்வாகை வழியைக் காட்டும்?

7.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
'உலகின் தலைசிறந்த அறநூல் திருக்குறள்"
அ)உலகின் தலைசிறந்த அறநூல் எது?
ஆ)திருக்குறள் தலைசிந்த அறநூலா?
இ)திருக்குறள் எத்தகைய நூல்?
ஈ)திருக்குறள் எவ்வகை நூல்?

8.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்திடுக
சித்தன்னவாசல் சிற்பங்கள் பேரழகு உள்ளவை
அ)பேரழகு உள்ள சிற்பங்கள் எவை?
ஆ)சித்தன்னவாசல் சிற்பங்கள் எபப்டி உள்ளன?
இ)எந்தச் சிறபங்கள் பேரழகு உள்ளவை?
ஈ)பேரழகான சிற்பங்கள் உள்ளனவா?

9.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
'பூரான் கடித்தால் அதன் தடிப்பு உடனே மாறப் பனை வெல்லத்தை உண்ண வேண்டும் "
அ)பூரான் கடித்தால் எதனை உண்ண வேண்டும்?
ஆ)அதன் தடிப்பு மறா எதை உண்ண வேண்டும்?
இ)பூரான் கடித்தால் அதன் தடிப்பு மாற எதை உண்ண வேண்டும்?
ஈ)பூரான் கடித்தால் அதன் தடிப்பு உடனே மாற எதை வேண்டும்?

10.'இன்னும் என்னென்ன நூல்கள் இருந்தனவோ" இது எவ்வகை வாக்கியம்
அ)கலவை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்

11.வேர்ச்சொல்லைக் கண்டறிக:'கொன்றான்"
அ)கொல்
ஆ)கொலை
இ)கொன்
ஈ)கொள்

12.'உண்டான்" என்னும் சொல்லின் வேர்ச்சொல் எது?
அ)உண்டு
ஆ)உண்ட
இ)உண்
ஈ)உண்டனன்

13.'நீண்ட"- என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க"
அ)நீ
ஆ)நீள்
இ)நீண்
ஈ)நீன்

14.'நின்றான்" என்ற முற்;றிற்குரிய வேர்ச்சொல்லைத் தேர்க
அ)நில்
ஆ)நிற்றல்
இ)நின்று
ஈ)நின்ற

15.'கல்" என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்
அ)கற்கிறான்
ஆ)கற்ற
இ)கற்றவன்
ஈ)கற்று

16.'படி" என்ற வேர்ச்சொல்லிருந்து வினைமுற்றைக் கண்டெழுதுக
அ)படித்து
ஆ)படித்த
இ)படிக்கின்ற
ஈ)படித்தோம்

17.வினையெச்சம் காண்க : 'காண்"
அ)காண்டு
ஆ)கண்டு
இ)கண்ட
ஈ)கண்டவன்

18.'பிடி" என்ற சொல்லிற்குறிய வினைமுற்று வடிவத்தைக் காண்க
அ)பிடித்து
ஆ)பிடித்தவன்
இ)பிடித்த
ஈ)பிடித்தான்

19.'உருள்" என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்
அ)உருண்ட
ஆ)உருள்க
இ)உருண்டு
ஈ)உருட்டுக

20.'பெறு" - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம்
அ)பெறல்
ஆ)பெற்று
இ)பெற்ற
ஈ)பெறுதல்



No comments:

Post a Comment