SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

46.7-ஆம் வகுப்பு | தமிழ்

411.    7-ஆம் வகுப்பு | தமிழ் |கவிஞரேறு, பாவலர் மணி என்னும் பட்டங்கள் பெற்ற கவிஞர் யார்?
வாணிதாசன்
412.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்" என அழைக்கப்படுபவர் யார்?
கவிஞர் வாணிதாசன்
413.    7-ஆம் வகுப்பு | தமிழ் |வாணிதாசன் வாழ்ந்த காலம் எது?
22.07.1915 முதல் 07.08.1974 வரை
414.    7-ஆம் வகுப்பு | தமிழ் |தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடியில் "பதுமை" என்னும் சொல் உணர்த்தும் பொருள் என்ன?
415. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    "தென்னிந்தியாவின் ஏதென்ஸ்" என்று புகழப்பட்ட நகரம் எது?
 மதுரை
416. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    "திருவிழா நகர்" மற்றும் "கோவில் மாநகர்" என்று அழைக்கப்படும் நகரம் எது?
மதுரை
417. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    "மதுரை" என்ற சொல்லுக்கு பொருள் என்ன?
இனிமை
418.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"தமிழ்கெழு கூடல்" என்று புறநானூறு போற்றியது எதை?
மதுரை
419.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"கூடல்" என்றும் "ஆலவாய்" என்றும் வேறு பெயர்கள் கொண்ட மாநகர் எது?
மதுரை
420.    7-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமைந்தால் மதுரை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நான்மாடக்கூடல்
421.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
அறுவை வீதி
422.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரையில் தானியக் கடை விற்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கூலவீதி
423.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரையில் பொற்கடைகள் உள்ள தெரு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பொன் வீதி
424.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரையில் மன்னர் வாழும் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
மன்னவர் வீதி
425.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரையில் அந்தணர் வாழ்ந்த வீதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
மறையவர் வீதி
426.    7-ஆம் வகுப்பு | தமிழ் |அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக இருந்தவர் யார்?
மாணிக்கவாசகர்
427.    7-ஆம் வகுப்பு | தமிழ் |திருஞானசம்பந்தர் எந்த பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர்?
கூன்பாண்டியன்
428.    7-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரருக்கு மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து எதை பரிசளித்தார்?
முத்துமணி மாலை
429. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவி தமிழ் வளர்த்தவர் யார்?
வள்ளல் பாண்டித்துரைதேவர்.
430.    7-ஆம் வகுப்பு | தமிழ் |சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் எது?
கோவலன் பொட்டல்



No comments:

Post a Comment