SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

45.tamil material

101.சந்திப் பிழை நீங்கிய தொடர் அறிக
அ)பட்டு சேலை உற்பத்தியில் காஞ்சி சிறந்தது
ஆ)பட்டு சேலை உற்ப்பத்தியல் காஞ்சி சிறந்தது
இ)பட்டுச் சேலை உற்பத்தியில் காஞ்சி சிறந்தது
ஈ)பட்டுச்சேலை உற்ப்பத்தியில் காஞ்சி சிறந்தது

102.சந்திப் பிழைகள் நீக்கப் பெற்ற தொடரைக் கண்டு எழுதுக
அ)கூடைக்காரியிடம் காடை கறி கேட்டுத் தாடையைத் தடவினான்
ஆ)கூடைக்காரியிடம் காடைக்கறி கேட்டுத் தாடையைத் தடவினான்
இ)கூடைக்காரியிடம் hகடை கறி கேட்டுத் தாடையை தடவினான்
ஈ)கூடைக்காரியிடம் காடை கறி கேட்டு தாடையை தடவினான்

103.சந்திப் பிழைகள் நீக்கப் பெற்ற தொடரைக் கண்டு எழுதுக
அ)மாட்டுக் கொட்டகைப் போல் ஒட்டைக் குடிசைகள்
ஆ)மாட்டுக் கொட்கை போல் ஒட்டை குடிசைகள்
இ)மாட்டுக் கொட்கை போல் ஒட்டை குடிசைகள்
ஈ)அறிஞர்கள் மேடைக்கு வந்தார்

104.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)அறிஞர்கள் மேடைக்கு வந்தது
ஆ)அறிஞர்கள் மேடைக்கு வந்தார்கள்
இ)அறிஞர்கள் மேடைக்கு வந்தன
ஈ)அறிஞர்கள் மேடைக்கு வந்தார்

105.ஒருமை பன்மை பிழையற்ற தொடர் அறிக
அ)சங்க காலத்தில் இசைத் தமிழ் சீரும் சிறப்புமுற்றுத் திகழ்ந்தன
ஆ)சங்க காலத்தில் இசைத் தமிழ் சீரும் சிறப்புமுற்றுத் திகழ்ந்தது
இ)சங்க காலத்தில் இசைத் தமிழ் சீரும் சிறப்புமுற்றுத் திகழ்கின்றன
ஈ)சங்க காலத்தில் இசைத் தமிழ் சீரும் சிறப்புமுற்றுத் திகழும்

106.மரபு பிறழாத சொல்லைத் தேர்க
அ)சிங்கக் குட்டி
ஆ)சிங்கப் பறழ்
இ)சிங்கக் குருளை
ஈ)சிங்கக் கன்று

107.மரபுப் பிழைகளை நீக்குக
அ)பல்லி கத்தும்
ஆ)பல்லி சொல்லும்
இ)பல்லி பேசும்
ஈ)பல்லி கீச்சிடும்

108.மரபுப் பிழையற்ற தொடர் தேர்க
அ)குதிர கத்தியதைக் கேட்டான்
ஆ)குதிரை குரைத்ததைக் கேட்டான்
இ)குதிரை கனைத்ததைக் கேட்டான்
ஈ)குதிரை கூவியதைக் கேட்டான்

109.மரபுப் பிழையற்ற தொடர் தேர்க
அ)ஆட்டு மந்தையில் புகுந்தான்
ஆ)ஆட்டுக் கூட்டத்தில புகுந்தான்
இ)ஆட்டவையில் புகுந்தான்
ஈ)ஆட்டுச் சபையில் புகுந்தான்

110.பிறமொழிச் சொற்கள் நீங்கிய வாக்pயத்தைக் குறிப்பிடுக
அ)கம்ப்யூட்டர் சாயின்ஸ் படித்தவர்க்கு ஜாப் ஆபர்சூனிடி உண்டு
ஆ)கணிப்பொறி சயின்ஸ் படித்தவர்க்கு வேலை வாய்ப்புண்டு
இ)கணிப்பொறி அறிவியல் படித்தவர்க்கு ஜாப் ஆபர்சூனிட்டி உண்டு
ஈ)கணிப்பொறி அறிவியல் படித்தவர்க்கு வேலைவாய்ப்பு உண்டு

111.கவியரசு - இத்தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
அ)பாரதிதாசன்
ஆ)சுரதா
இ)கண்ணதாசன்
ஈ)வாணிதாசன்

112.பேரறிஞர் என்னும் தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
அ)அண்ணா
ஆ)ராஜாஜி
இ)பெரியார்
ஈ)எம்.ஜி.ஆர்

113.தொடரும் தொடர்பும் அறிழதல் இரட்டைக் காப்பியங்கள் இஃது எதனைக் குறிக்கும்?
அ)அகநானூறு புறநானூறு
ஆ)சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
இ)பொருநராற்றுப்படை,கூத்தராற்றுப்படை
ஈ)சிலப்பதிகாரம் ,மணிமேகலை

114.தமிழ்மறை என்னும் அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்
அ)திருக்குறள்
ஆ)நாலடியார்
இ)தொல்காப்பியம்
ஈ)திருமந்திரம்

115.இராமாவதாரம் என்று பெயரிடப்பட்ட நூல்
அ)வால்மீகி இராமாயணம்
ஆ)கம்ப இராமாயணம்
இ)பால இராமாயணம்
ஈ)துளசி இராமாயணம்

116.பூம்பனல் என்னம் சொல் எவ்வாறு பிரியும்?
அ)பூம் + புனல்
ஆ)பூம்பு + னல்
இ)பூம்பு + அனல்
ஈ)பூ + புனல்

117.பிரித்தெழுதுக - நின்றுயிர்க்கு
அ)நின்ற + உயிர்க்கு
ஆ)நின்று + உயிர்க்கு
இ)நில் + உயிர்க்கு
ஈ)நின் + உயிர்க்கு

118.பிரித்தெழுதுக - உயர்பேராளன்
அ)உயர் + பேர் + ஆளன்
ஆ)உயர்வு + போ +ஆளன்
இ)உயர் + பெருமை + ஆளன்
ஈ)உயர் + பேர் + ஆலன்

119.பேரழகு - பிரித்து எழுதுக
அ)பேூ அழகு
ஆ)பெரு +அழகு
இ)பேர் + அழகு
ஈ)பெருமை அழகு

120.கயனெடுங்கண் - என்னும் சொல் இவ்வாறு பிரியும்
அ)கயன் + நெடுங்கண்
ஆ)கயல் + நெடுங்கண்
இ)கயன் + நெடுமை+ கண்
ஈ)கயல்+ நெடுமை +கண்



No comments:

Post a Comment