SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

44.general tamil study material

81.பொருந்தா ஒன்றைத் தேர்வு செய்க
அ)நற்றிணை
ஆ)குறுந்தொகை
இ)மலைபடுகடாம்
ஈ)ஐங்குறுநூறு

82.சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க
அ)முரட்டுக் காளை சீறி பாய்ந்தது
ஆ)முரட்டுக் காளை சீறிப் பாய்ந்தது
இ)முரட்டு காளை சீறிப் பாய்ந்தது
ஈ)முரட்டு காளை சீற  பாய்ந்தது

83.சந்திப் பிழை நீக்குக
சொல்ல கருதியவற்றை கேட்போர் ஏற்று
கொள்ளும்படி புலப்டுத்தும் மொழிநடையெ இசைதமிழ் ஆகும்
அ)சொல்ல கருதியவற்றை கேட்போர் ஏற்றுக் கொள்ளும்படி புலப்படுத்தும் மொழிநடையே இசைதமிழ் ஆகும்
ஆ)சொல்லைக் கருதியவற்றைக் கேட்போர் ஏற்றுக் கொள்ளும்படி பலப்படுத்தும் மொழிநடையே இசைதமிழ் ஆகும்
இ)சொல்ல கருதியவற்றை கேட்போர் ஏற்று கொள்ளும்படி புலப்படுத்தும் மொழிநடையே இசைத்தமிழ் ஆகும்
ஈ)சொல்ல கருதியவற்றைக் கேட்போர் ஏற்றுக் கொள்ளும்படி புலப்படுத்தும் மொழிநடையே இசைதமிழ் ஆகும்

84.ஒருமை பன்மை பொருந்தியுள்ள தொடரைத் தேர்க
அ)மான்கள் துள்ளி ஒடின
ஆ)மான்கள துள்ளி ஒடியது
இ)மான் துள்ளி ஒடின
ஈ)மூன்றுமல்ல

85.கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் ஒருமை அல்லது பன்மைக் கேற்ற முடிவடைய தொடரைக் குறிப்பிடுக
அ)மின் விசிறிகள் ஒடிக் கொண்டிருக்கிறது
ஆ)மாட்டுவடன் ஆடும் வயலில் மேய்ந்தன
இ)பதிதாகப் பல தொடக்கப்பள்ளிகள் கட்டப் பெற்றுள்ளது
ஈ)மின்விசிறிகள் ஒடிக் கொண்டிருக்கின்றன

86.மரபுப் பிழைகளை நீக்குக
அ)நரி உறுமும்
ஆ)நரி கீச்சிடும்
இ)நரி பிளிறும்
ஈ)நரி ஊளையிடும்

87.மரபுப் பிழை நீக்கி எழுதுக
அ)பனை இலையால் கீரை அமைத்தனர்
ஆ)பனை இலையால் கூரை வேய்ந்தனர்
இ)பனை ஒலையால் கூரை அமைத்தனர்
ஈ)பனை அலையால் கூரை வேய்ந்தனர்

88.கீழ்காணும் தொடர்களில் மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்க?
அ)விளக்கைக்கொளுத்து
ஆ)விளக்கை எரியச் செய்
இ)விளக்கை ஒளிவிடச் செய்
ஈ)விளக்கை ஏற்று

89.வழுஉச் சொல் அற்ற தொடரைத் தேர்க
அ)இந்தச் சுவரில எழுதினால் ஐம்பது ரூபாய் அபராதம்
ஆ)இந்த சுவறல் எழுதினால் அம்பது ரூபா அபறாதம்
இ)இந்த சுவரில் எழுதினால் அம்பது ரூபாய் அபாராதம்
ஈ)இச்சவறில் எழுதினால் அம்பது ரூவா அபாராதம்

90.பிறமொழிச் சொற்களை நீக்குக
அ)குடிப்பதற்கு ஜலம் கொண்டு வா
ஆ)குடிக்க நீர் கொண்டு வா
இ)குடிப்பதற்கு சலம் கொண்டு வா
ஈ)குடிக்கத் தீர்த்தம் கொண்டு வா

91.பிரித்தெழுதுக - கூவற்கீழ்
அ)கூவல் +  கீழ்
ஆ)கூவம் +  கீழ்
இ)கூவன் +  கீழ்
ஈ)கூவ +  கீழ்

92.எதிர்ச்சொல் தருக - கடுஞ்சொல்
அ)இன்னாச்சொல்
ஆ)கொடுஞ்சொல்
இ)இன்சொல்
ஈ)கடுமையான சொல்

93.எதிர்ச்சொல் காண்க - விருப்பு
அ)அருவறுப்பு
ஆ)மறுப்பு
இ)வெறுப்பு
ஈ)ஆவல்

94.மடி எதிர்ச்சொல் தருக
அ)சுறுசுறுப்பு
ஆ)ஆள்வினை
இ)சோம்பல்
ஈ)உழைப்பு

95.எதிர்ச்சொல் எடுத்தெழுதுக - வீரன்
அ)மறவன்
ஆ)பகைவன்
இ)கோழை
ஈ)கம்பராமாயணம்

96.பொருந்தாச் சொல் தேர்க
அ)புறநானூறு
ஆ)தொல்காப்பியம்
இ)சிலப்பதிகாரம்
ஈ)கம்பராமாயணம்

97.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் - எட்டா
அ)எட்டிய
ஆ)கிடைக்காது
இ)வராது
ஈ)பெற முடியாது

98.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
உறக்கம், நித்திரை, தூக்கம், விழிப்பு
அ)நித்திரை
ஆ)விழிப்பு
இ)உறக்கம்
ஈ)தூக்கம்

99.பொருந்தாத ஒன்றைக் காண்க
அ)வட்டாட்சியர்
ஆ)கோட்டாட்சியர்
இ)வருவாய் ஆய்வாளர்
ஈ)முதன்மை கல்வி அலுவலர்

100.பொருந்தாச் சொல்லுக்குரிய குறியை எடுத்து எழுதுக
அ)ஆட்டம்
ஆ)ஒட்டம்
இ)தோட்டம்
ஈ)நாட்டம்



No comments:

Post a Comment