SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

43.tamil material

61.செயப்பாட்டு வினை வாக்கியத்தைத் தேர்வு செய்க
அ)திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்
ஆ)இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்
இ)திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது
ஈ)கம்பர் இராமாயணத்தை இயற்றினார்

62.கடலில் கரைத்த சாயம் போல - பொருள் தேர்க
அ)பயனின்மை
ஆ)மீளாமை
இ)கலத்தல்
ஈ)கசத்தல்

63.மலரும் மணமும் போல என்ற உவமையால் விளக்கப் பெறும் பொருள்
அ)பயன் தருதல்
ஆ)மணம் வீசுதல்
இ)இணை பிரியாமை
ஈ)நீங்காமை

64.கிணற்றுத் தவளை போல் - பொருள் அறிக
அ)அறியாமை
ஆ)நட்பு
இ)பகைமை
ஈ)கட்டுப்பாடு

65.தமிழும் சுவையும் போல - பொருள் அறிக
அ)நெருக்கம்
ஆ)இனிமை
இ)இரண்டறக் கலத்தல்
ஈ)நீங்காமை

66.எதுகையைக் கண்டறிக
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோகக்கி வாழும் குடி
அ)வானோக்கி - வாழும்
ஆ)கோனோக்கி - வாழும்
இ)உலகெல்லாம் - மன்னவன்
ஈ)வானோக்கி - கோனோக்கி

67.பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
இத்தொடரில் அமைந்துள்ள இயைபுத் தொடையை இயம்புக
அ)இலமே - இலமே
ஆ)பெரியோரை - இலமே
இ)இலமே -இகழ்தல்
ஈ)அதனினும் - இகழ்தல்

68.உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
அ)இணை மோனை
ஆ)கூழை மோனை
இ)போழிப்பு மோனை
ஈ)மேற்கதுவாய் மோனை

69.எதுகை நோந்தெழுதுதல்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் பளனும் சுரக்கென வாழ்த்தி
அ)பசியும்,பிணியும்
ஆ)பசியும்,நீங்கி
இ)பசியும்,வசியும்
ஈ)பிணியும்,பகையும்

70.அடியெதுகையைக் காண்க
இடங்கருண்ட இளஞ்சிறு மகனை
உடம்போடும் உயிரொடும் உய்வித்தது எம்மொழி
அ)இடங்கர் - இறஞ்சிறு
ஆ)உடம்பொடும் - உயிரொடும்
இ)இடங்கர் - உடம்பொடும்
ஈ)இளஞ்சிறு - உயிரொடும்

71.உயர்ந்தோங்கும் இச்சொல்லிற்குரிய இலக்கணக் குறிப்பு யாது?
அ)உரிச்சொற்றொடர்
ஆ)ஒருபொருட் பன்மொழி
இ)திரிசொல்
ஈ)பண்பத்தொகை

72.மூதூர்- இலக்கணக் குறிப்பு எழுதுக
அ)வினைத்தொகை
ஆ)அன்மொழித்தொகை
இ)பண்புத்தொகை
ஈ)வினைமுற்று

73.இலக்கணக் குறிப்பறிதல் - உதிக்கறின்ற
அ)வினையெச்சம்
ஆ)உருவகம்
இ)உம்மைத் தொகை
ஈ)பெயரெச்சம்

74.விடைக்கேற்ற வினாவினைத் தேர்க் வள்ளல் குமணன் புலவர் பொருஞ்சித்திரனாரைக் கண்டதும் வறியோன் பொற் குவியலைக் கண்டது போல் மகிழ்ந்தான்
அ)குமணன் யாரைக் கண்டான்?
ஆ)குமணன் எவ்வாறு மகிழ்ந்தான்?
இ)வள்ளல் குமணன் எவ்வாறு மகிழ்ந்தான்?
ஈ)புலவரைக் கண்டதும் குமணன் அடைந்த மகிழ்ச்சி யாது?

75.விடைக்கேற்ற வினா காண்க
உடல்நலம் கொண்டவரே உலகில் இன்பம் உடையவர்
அ)எப்படி இன்பம் பெறலாம்?
ஆ)உலகில் இன்பம் உடையவர் யார்?
இ)யாருக்கு இன்பம் கிட்டும்?
ஈ)இன்பம் யார் பெறுவார்?

76.விடைக்கேற்ற வினா தேர்ந்தறிக.தீண்டாமை ஒழிய வேண்டுமெனில் சாதியை ஒழிக்க வேண்டும்
அ)சாதியை ஒழிப்பது எப்படி?
ஆ)சாதியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?
இ)தீணடாமை ஒழிய எதை ஒழிக்க வேண்டும்
ஈ)சாதியால் எதை ஒழிக்கலாம்?

77.விடைக்கேற்ற வினாவைக் காண்க
முயன்றால் அனைத்தும் முடியும்
அ)முயன்றால் எப்படி முடியும்
ஆ)முயன்றால் முடிப்பது எதனை?
இ)முயன்றால் அனைத்தும் முடியுமா?
ஈ)மயன்றால் முடியாதது இல்லையா?

78.விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடுக்க
சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது,வியப்புக்குரியது
அ)சித்த வைத்தியத்தில ;உணவும் மருந்தாகுமா?
ஆ)சித்த வைத்தியத்தில வியப்புக்குரியதாக அமைந்திருப்பது எது?
இ)சித்த வைத்தியம் சிறக்கக் காரணம் என்ன?
ஈ)உணவும்,மருந்தும் ஒன்றாக அமைந்திருப்பது

79.இராமன் பாடம் படித்தான்,தேர்வு எழுதினான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான்- எவ்வகை வாக்கியம் என இயம்புக
அ)கலவை வாக்கியம்
ஆ)தொடர் வாக்கியம்
இ)தனி வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்

80.எவ்வகை வாக்கியம் எனக் கண்டு எழுதுக இந்தியா அணுகுண்டு சோதனையை வெற்றிகராமாக நடத்தியது
அ)செய்தி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்



No comments:

Post a Comment