# பிரித்தெழுது: "தெங்கம் பழம்"
A. தெங்கு+பழம்
B. தெங்கு+அம்+பழம்
C. தெங்கம்+பழம்
D. தேங்காய்+பழம்
Answer : B.
# "அவரவர்" இலக்கணக்குறிப்பு அறிக:
A. இரட்டைக் கிளவி
B. அடுக்குத்தொடர்
C. வினைத்தொடர்
D. உவமைத்தொடர்
Answer : B.
# பிரித்தெழுது: செந்தமிழ்
A. செ+தமிழ்
B. செம்மை+தமிழ்
C. செந்+தமிழ்
D. செம்+தமிழ்
Answer : B.
# "மொழியாமை" இலக்கணக்குறிப்பு அறிக:
A. எதிர்ச்சொல்
B. எதிமறை இடைநிலை
C. வினைத்தொகை
D. எதிர்மறை தொழிற்பெயர்
Answer : D.
# "ஐ" – என்னும் சொல்லின் பொருள் யாது?.
A. வியப்பு
B. ஐயர்
C. ஐந்து
D. ஐயை
Answer : A.
# வெற்பு – இச்சொல்லின் பொருள்
A. வெறுப்பு
B. விருப்பு
C. மலை
D. கடல்
Answer : C.
# அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல்
A. மும்மணிக்கோவை
B. ஆசாரக்கோவை
C. முதுமொழிக்காஞ்சி
D. பதிற்றுப்பத்து
Answer : C.
# ஞால் – என்னும் சொல்லின் பொருள்
A. ஞாலம்
B. உலவுதல்
C. தொங்குதல்
D. சுற்றுதல்
Answer : C.
# மீமிசை ஞாயிறு – என்பது
A. இனமொழி
B. தனிமொழி
C. ஒருபொருட்பன்மொழி
D. பொதுமொழி
Answer : C.
# புறா – இதன் ஒலிமரபு
A. கத்தும்
B. முரலும்
C. கீச்சிடும்
D. குனுகும்
Answer : D.
# அமர் – என்னும் சொல்லின் பொருள்
A. வெற்றி
B. யானை
C. தேவர்
D. போர்
Answer : D.
# வலவன் ஏவா வானவூர்தி – இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்
A. புறநானூறு
B. தொல்காப்பியம்
C. நற்றிணை
D. குறுந்தொகை
Answer : A.
# அஞ்சு – இதிலுள்ள்ள போலி
A. முதற்போலி
B. இடைப்போலி
C. கடைப்போலி
D. முற்றுப்போலி
Answer : D.
# யா – வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
A. யாத்தார்
B. யாக்க
C. யாத்த
D. யாக்கல்
Answer : A.
# சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி
a. சார்லஸ் விதி
b. ஸ்டீபனின் நான்மடி விதி (விடை)
c. பாயில் விதி
d. கிர்சாப் விதி
# தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது
a. இரத்ததின் மெல்லிய அடர்த்தியால்
b. இரத்ததின் பாகுநிலையால் (விடை)
c. நுண்புழையேற்றத்தால்
d. உறிஞ்சுவதால்
# கதிரியக்கக் கார்பன் வயதுக் கணிப்பு பயன்படுவது
a. நோய்களைக் கண்டறிய
b. சரித்திரச் சான்றுகளின் வயதைக் காண (விடை)
c. வளிமண்டலத்தில் கார்பன் அளவைக் காண
d. இவற்றுள் எதுவுமில்லை
# வீச்சு பண்பேற்றத்தை விட அதிர்வெண் பண்பேற்றம் சிறந்தது. ஏனெனில்
a. உருக்குலைவு இருக்காது (விடை)
b. உருக்குலைவு மிக அதிகம்
c. உட்புற ஒலி உண்டாக்கப்படுவதில்லை
d. உட்புற ஒலியை வடிகட்டி விடலாம்.
No comments:
Post a Comment