SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

39.tnpsc questions in tamil

101.விடைக்கேற்ற வினாவைத் தேர்நதெடுத்தல்
இயற்கையைச் சார்ந்தே மனம் இயங்குகிறது என்பதைச் சங்க இலக்கியம் அறுதியிடுகிறது
அ)இயற்கையைச் சார்ந்தே மனம் இயங்குகிறதா?
ஆ)மனத்தைச சங்க இலக்கியம் எவ்வாறு அறுதியிடுகிறது?
இ)சங்க இலக்கியம் மனம் எப்படி இயங்குகிறது என அறுதியிடுகிறது?
ஈ)சங்க இலக்கயம் எப்படி இயங்குகிறது?

102.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் மனிதன் சத்தியத்தைக் காப்பற்ற வேண்டும்
அ)மனிதன் எதற்காகக் காப்பாற்ற வேண்டும்?
ஆ)மனிதன் எப்படிக் காப்படிக் காப்பற்ற வேண்டும்?
இ)மனிதன் எதனைக் காப்பற்ற வேண்டும்?
ஈ)மனிதன் ஏன் காப்பாற்ற வேண்டும்?

103.எவ்வகை வாக்கியம் எனக் கண்டு எழுதுக
தமிழ்ச்செல்வன் திருச்சிக்குச் சென்றான் மலைக்கோட்டை ஏறினான்,இறைவனை வணங்கினான்
அ)தொடர் வாக்கியம்
ஆ)தனி வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்

104.வாக்கிய வகையினைக் குறிப்பிடுக - 'அறம் செய்"
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்

105.பின்வரும் வாக்கியம் எவ்வகை வாக்கியம் எனக கூறுக.
இந்திய வீரர்கள் மிகவும் வீராமாய்ப் போர் புரிகின்றனர்
அ)எச்ச வினை
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வாக்கியம்

106.பின்வரும் வாக்கியம் எவ்வகை வாக்கியம்  எனக் கூறுக
என்னே பரிமேலழக்ன பாரித்த உரையின் மாண்பு
அ)தனி வாக்கியம்
ஆ)பிறவினை
இ)செய்தி வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்

107.பின்வரும் வாக்கியம் எவ்வகை வாக்கியம் எனக்கூறுக
பண்டைப் புலவர் பாடின் மன்னரைப் பாடிற்றிலர்
அ)தன்வினை
ஆ)செய்வினை
இ)எதிர்மறை வினை
ஈ)உடன்பாட்டு வினை

108.'ஆசிரியரால் பாடம் கற்பிக்கப்பட்டது" - இது எவ்வகை வாக்கியம் என அறிக
அ) செய்தி வாக்கியம்
ஆ) உணர்ச்சி வாக்கியம்
இ)செயப்பாட்டு வினை வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்

109.செய்வினை வாக்கியம் எது என அறிக
அ)நான் பாடம் படித்தேன்
ஆ)பாடம் என்னால் படிக்கப்பட்டது
இ)பாடம் நான் படித்தேன்
ஈ)பாடம் என்னைப படித்தது

110.ஆனந்தி பாடம் படித்தாள் - இது எவ்வகை வாக்கியம்  எனத் தேர்க
அ)பிறவினை
ஆ)தன்வினை
இ)எதிர்மறை வினை
ஈ)எச்ச வினை

111.பிறவினை வாக்கியத்தைக கண்டு எழுதுக
அ)அரசன் கோவிலைக் கட்டுவித்தான்
ஆ)அரசனால கோவில் கட்டப் பெற்றது
இ)அரசன் கோவிலைக் கட்டினான்
ஈ)அரசன் கோவிலைக் கட்டச் செய்தான்

112.'இலைமறை காய் போல" - உவமைக்கேற்ற பொருள் தேர்க
அ)வேதம்
ஆ)மறைபொருள்
இ)நெருக்கம்
ஈ)இரகசியம்

113.உவமையால் விளக்கப் பெறும் பொருளைத் தேர்க உள்ளங்கை நெல்லிக்கனி போல
அ)தெளிவு
ஆ)சிறுமை
இ)விளக்கம்
ஈ)உண்மை

114.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க - 'அடியற்ற மரம் போல"
அ)வீழ்தல்
ஆ)காய்த்தல்
இ)அசைத்தல்
ஈ)மறுத்தல்

115.உவமைக்கேற்ற பொருள் தேர்க மழைமுகம் காணாப் பயிர் போல
அ)மகிழ்ச்சி
ஆ)வீழ்ச்சி
இ)பெருமை
ஈ)வாட்டம்

116.'கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும்" இதில் அமைந்துள்ள மோனை
அ)இணை மோனை
ஆ)மேற்கதுவாய் மோனை
இ)கூழை மோனை
ஈ)பொழிப்பு மோனை

117.அடி எதுகையைக குறிப்பிடுக
படப்பாய் அணைமேல் பாற்கடல் மிசையே கிடப்போன் தன்மனைக் கிழத்தியும் - உடன்வர
அ)படப்பாய் - பாற்கடல்
ஆ)கிடப்போன் - உடன்வர
இ)அணைமேல் - மனைக்கிழத்தி
ஈ)படப்பாய் - கிடப்போன்

118.ஒடி விளையாடு பாப்பா ஒய்ந்திருக்கலாகாது பாப்பா" - இயைபுத் தொடையைத் தேர்ந்தெடு
அ)ஒடி - ஒய்ந்திரு
ஆ)ஒடி - பாப்பா
இ)பாப்பா - பாப்பா
ஈ)விளையாடு - பாப்பா

119.'நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய" - இதில அமைந்துள்ள எதுகை
அ)இணை எதுகை
ஆ)கூழை எதுகை
இ)மேற்கதுவாய் எதுகை
ஈ)ஒரூஉ எதுகை

120.'காங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்
உங்கள் குலத் தனிநாதற் குயிர்த்துணைவனுயர்தோளான்"
-இவ்வடிகளில் பயின்றுள்ள இயைபுத் தொடை யாது?
அ)கங்கை - கரை
ஆ)உங்கள் - உயிர்த்துணைவன்
இ)கங்கை - உங்கள்
ஈ)நாவாயான் - உயர்தோளான்



No comments:

Post a Comment