SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

39.general tamil questions and answers for tnpsc group

ஈக என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. வியங்கோள் வினைமுற்று
B. தொழிற்பெயர்
C. நீட்டல் விகாரம்
D. குறிப்பு வினைமுற்று
Answer : A.

பசுத்தோல் போர்த்திய புலி போல இவ்வுவமையால் விளக்கப் பெரும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
A. வேட்டை
B. வேட்கை
C. நயவஞ்சகம்
D. வேண்டாமை
Answer : C.

எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக
A. எப்பொருள் கேட்பினும்
B. கேட்பினும் அப்பொருள்
C. யார் யார் வாய் அப்பொருள்
D. எப்பொருள் அப்பொருள்
Answer : D.

கெழீஇ என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. வினைத்தொகை
B. சொல்லிசை அளபெடை
C. ஆகுபெயர்
D. அன்மொழித்தொகை
Answer : B.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
A. மரம் வைத்தவன் என்ன செய்வான்?
B. மரம் வைத்தவன் தண்ணீரை என்ன செய்வான்?
C. மரம் வைத்தவன் எதில் ஊற்றுவான்?
D. யார் தண்ணீர் ஊற்றுவான்?
Answer : A.

காண் என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
A. கண்டு
B. கண்ட
C. கண்டாளை
D. கண்டாள்
Answer : D.

செய்வினை சொற்றொடரைக் கண்டறிக
A. கட்டுரை கனிமொழியால் எழுதப்பட்டது
B. கனிமொழி கட்டுரை எழுதினாள்
C. கட்டுரை கனிமொழி எழுதுவித்தாள்
D. கனிமொழி கட்டுரை எழுதுவாள்
Answer : B.

தன்வினை சொற்றொடரைக் கண்டறிக
A. கயல்விழி தேர்வுக்கு படித்தாள்
B. கயல்விழி தேர்வுக்குப படி
C. கயல்விழி தேர்வுக்குப படிப்பித்தாள்
D. கயல்விழி தேர்வுக்குப படிப்பாள்
Answer : A.

சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.
A. கதிர் புலர பொழுது கூவ சேவல் எழுந்தது
B. புலர பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர்
C. பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர் புலர
D. சேவல் கூவ பொழுது புலர கதிர் எழுந்தது
Answer : D.

வயல் பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A. இடப்பெயர்
B. காலப்பெயர்
C. பண்புப்பெயர்
D. பொருட்பெயர்
Answer : A.

படி என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேந்தெடுக்க.
A. படிக்கும்
B. படியும்
C. படிப்பதற்கு
D. படித்து
Answer : D.

இகழ் என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A. இகழ்தல்
B. இகழு
C. இகழும்
D. இகழ்வார்
Answer : D.

உழு என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
A. உழுதார்
B. உழுது
C. உழுத
D. உழுதல்
Answer : A.

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
A. தோழன், திருமுடி, தாண்டு, தூரிகை
B. தாண்டு, திருமுடி, தூரிகை, தோழன்
C. தாண்டு, திருமுடி, தோழன், தூரிகை
D. தூரிகை, தோழன், தாண்டு, திருமுடி
Answer : B.

#  Principle என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத தேர்ந்தெடுக்க.
A. முதல்வர்
B. கொள்கை
C. அதிகாரி
D. நோக்கம்
Answer : B.

எதிர்ச்சொல் தருக : அண்டி
A. மண்டி
B. விலகி
C. காண்டி
D. தாண்டி
Answer : B.

எதிர்ச்சொல் தருக : நல்வினை
A. நல்லவினை
B. செய்வினை
C. நன்மை
D. தீவினை
Answer : D.



No comments:

Post a Comment