1271. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திருவிளையாடற்புராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?
மூன்று
1272. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திருவிளையாடற்புராணம் எத்தனை உட்பிரிவுகளைக் கொண்டது?
64 உட்பிரிவு
1273. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திருவிளையாடற்புராணம் எத்தனை விருத்தப்பாக்களைக் கொண்டது?
3363 விருத்தப் பாக்கள்
1274. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மதுரையில் இறைவன் நிகழ்த்திய எத்தனை திருவிளையாடல்களை திருவிளையாடல் புராணம் கூறுகிறது?
64 திருவிளையாடல் புராணம்
1275. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மதுரைக் காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டது?
18 படலங்கள்
1276. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கூடல் காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டது?
30 படலங்கள்
1277. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திருவாலவாய்க் காண்டம் எத்;தனை படலங்களைக் கொண்டது?
16 படலங்கள்
1278. 9-ஆம் வகுப்பு | தமிழ் | "வஞ்சகமாய நெஞ்சமொழி மொழிதல்" என்ற தலைப்பில் எழுதப்பட்ட பாடல் யாரால் எழுதப்பட்டது?
மதுரகவி பாஸ்கரதாஸ்
1279. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மதுரகவி பாஸ்கரதாஸ் வாழ்ந்த காலம் எது?
கி.பி. 1892 முதல் கி.பி. 1852 வரை
1280. 9-ஆம் வகுப்பு | தமிழ் | "எருது விடும் திருவிழாவை" பண்டைத்தமிழர் எவ்வாறு அழைத்தனர்?
ஏறுதழுவுதல்
1281. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சீர்கள் பல அடுத்து நடப்பது _____எனப்படும்.
அடி
1282. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடியின் வகைகள் யாவை?
குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐவகைப்படும்
1283. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் இருசீர்களைப் பெற்று வருவது_____ எனப்படும்.
குறளடி
1284. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் முச்சீர்களைப் பெற்று வருவது_____ எனப்படும்.
சிந்தடி
1285. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது_____ ஆகும்.
அளவடி அல்லது நேரடி
1286. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் ஐந்து சீர்களைப் பெற்று வருவது_____ ஆகும்.
நெடிலடி
1287. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் ஆறு அல்லது அதற்கு மேற்கண்ட பல சீர்களைப் பெற்று வருவதைக் _____ எனக் கூறுவர்.
கழிநெடிலடி
1288. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மலர்களைத் தொடுப்பது போலவே சீர்களிலும் அடிகளிலும் மோனை முதலியன அமையத் தொடுப்பது _____ எனப்படும்.
தொடை
1289. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தொடை எத்தனை வகைப்படும்?
எட்டு
1290. 9-ஆம் வகுப்பு | தமிழ் | செய்யுளில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது_____ எனப்படும்.
அடிமோனைத் தொடை
No comments:
Post a Comment