741. # இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுகள் உற்பத்தி செய்யப்படும் இடம் எலும்பு மஞ்சை.
742. # மீன்களின் இடப்பெயர்ச்சி உறுப்பு துடுப்புகள்
743. # மண்புழு நிமிடத்திற்கு 25 செமீ வேகத்தில் செல்லும்
744. # பறவைகளின் இறக்கைகள் அவைகளின் முன்னங்கால்களின் மாற்றி அமைக்கப்பட்ட நவீன அமைப்பாகும்.
745. # எலும்பினை வெளிப்புறமாக சூழ்ந்துள்ள கடின தோல் போன்ற அமைப்பிற்கு பெரியாஸ்டியம் என்று பெயர்.
746. # செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர் – இராபர்ட் பிரெளன்
747. # செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை இராபர்ட் பிரெளன் கண்டறிந்தார்.
748. # பன்னிரண்டு அல்லது பதின்மூன்று உள்ளுறுப்பு உறுப்பினர்கள் சேர்ந்து இரகசியமாகப் பணியாற்றும் குட்டித் தொழிற்சாலைதான் செல்
749. # தாவர, விலங்கு இரண்டுக்கும் செல்கள் ஒரே மாதிரியாக இருக்காது.
750. # பாக்டீரியா, சில பாசிகள் போன்றவை ஒரே செல்லினால் ஆனவை.
751. # செல்களின் உள்ளே சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை.
752. # சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு இல்லாத உட்கரு மட்டுமே கொண்ட செல்லை புரோகேரியாட்டிக் செல் என்று அறிஞர்கள் அழைக்கிறார்கள். அதாவது எளிய செல்.
753. # புரோகேரியாட்டிக் செல்லுக்கு எடுத்துக்காட்டு – பாக்டீரியா
754. # யூகேரியாட்டிக் செல் என்பது செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும் கொண்ட செல்.
755. # யூகேரியாட்டிக் செல் ஒரு முழுமையான செல். தாவர, விலங்கு செல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
756. # விலங்கு செல்லைச் சுற்றியுள்ள படலம் – பிளாஸ்மா படலம்.
757. # செல்லுக்கு வடிவம் கொடுப்பவை – பிளாஸ்மா படலம்.
758. # பிளாஸமா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் – புரோட்டோபிளாசம்.
759. # ஸ்டெம் செல்கள் சிறப்படையாத செல்கள், மைட்டாசிஸ் முறையில் பிளவுற்று அதிக செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது.
760. # மூலச்செல்கள் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும் தன்மை கொண்டது. எ.கா: இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்கள்.
No comments:
Post a Comment