SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

37.general tamil questions and answers for tnpsc group

பிரித்து எழுதுக :அரும்பொருள்
A. அருமை + பொருள்
B. அரும் + பொருள்
C. அரு + பொருள்
D. அ + பொருள்
Answer : A.

முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
A. நோக்குவார் செம்பொன்னும் ஒக்கவே ஓடும்
B. ஓடும் ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார்
C. ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார் ஓடும்
D. ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
Answer : D.

வாழ்க என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. தொழிற்பெயர்
B. வியங்கோள் வினைமுற்று
C. வினையாலணையும் பெயர்
D. பெயரெச்சம்
Answer : B.

அழி என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
A. அழிதல்
B. அழிந்து
C. அழித்தல்
D. அழிந்த
Answer : B.

மகிழ் என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A. மகிழ்ந்து
B. மகிழ்தல்
C. மகிழ்ந்தவன்
D. மகிழ்க
Answer : C.

ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: இளை இழை
A. மெலிதல் நூல்
B. கோழை எச்சில்
C. நெகிழ்தல் பூசுதல்
D. இளையவன் வறுமை
Answer : A.

பிரித்து எழுதுக : ஈராயிரம்
A. ஈ + ராயிரம்
B. இரு + ஆயிரம்
C. ஈர் + ஆயிரம்
D. இரண்டு + ஆயிரம்
Answer : D.

எதிர்சொல் தருக: சான்றோர்
A. உயர்ந்தோர்
B. மேலோர்
C. புல்லர்
D. ஆன்றோர்
Answer : C.

நகையும் உவகையும் என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. உம்மைத் தொகை
B. இழிவு சிறப்பும்மை
C. எண்ணும்மை
D. வினைத்தொகை
Answer : C.

கொழு கொம்பற்ற கோடி போல உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
A. ஆதரவு
B. தாவுதல்
C. ஆதரவின்மை
D. அசைதல்
Answer : C.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : பாரதியார் தேசியக் கவி என்று அழைக்கப்பட்டார்.
A. பாரதியார் பாடிய நூல்கள் யாவை?
B. பாரதியார் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
C. தேசியக் கவியா பாரதியார்?
D. பாரதியாரின் பெற்றோர் யார்?
Answer : B.

மா என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A. சிறிய
B. குறுகிய
C. பெரிய
D. அம்மா
Answer : C.

வருகின்றனன் இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
A. வா
B. வரும்
C. வந்த
D. வந்து
Answer : A.

தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A. பிறவினை வாக்கியம்
B. செயப்பாட்டு வினை வாக்கியம்
C. தன்வினை வாக்கியம்
D. செய்வினை வாக்கியம்
Answer : B.

வெரூஉம் என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. ஆகு பெயர்
B. அளபெடை
C. முற்றெச்சம்
D. ஈற்றுப்போலி
Answer : B.



No comments:

Post a Comment