SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

36.tnpsc questions in tamil

41.மரபுப் பிழையற்ற தொடர் எது?
அ)சிங்கக் குட்டி
ஆ)சிங்கக் குருளை
இ)சிங்கக் கன்று
ஈ)சிங்கக் குருத்து

42.மரபு வழு இல்லாத தொடர் எது?
அ)வெப்ப இலையில் மந்திரித்தான்
ஆ)வேப்பங்கலையில் மந்திரித்தான்
இ)வேப்பந்தழையில மந்திரித்தான்
ஈ)வேப்பங் கொத்தில் மந்திரித்தான்

43.பிறமொழிச் சொற்களை நீக்குதல்
'இந்தச் சங்கதியை என் தாயாரிடம் சொல்"
அ)சேதியை
ஆ)விஷயத்தை
இ)செய்தியை
ஈ)சமாச்சாரத்தை

44.பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது?
அ)கோவில் சம்பிரதாயப்படி பூழை நடந்தது
ஆ)கோவில் வழக்கப்படி பூழை நடந்தது
இ)கோவில் மரபுப் படி வழிபாடு நடந்தது
ஈ)கோவில் வழக்கப்படி வழிபாடு நடந்தது

45.பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் தேர்க
அ)இராமன் பிரசங்கம் செய்தான்
ஆ)இராமன் சொற்பொழிவு செய்தான்
இ)இராமன் பஜனை செய்தான்
ஈ)இராமன் பூஜை செய்தான்

46.அங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் அறிக
Election Commission எலெக்ஷன் கமிஷன்
அ)ஒட்டுரிமை ஆணையம்
ஆ)தேர்தல் ஆணையம்
இ)தேர்தல் நிறுவனம்
ஈ)தேர்தல் அமைப்பு

47.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தேர்க 'காண்டக்ட் சர்ட்டிபிகேட் வாங்கி வந்தேன்"
அ)நன்னடத்தை சர்ட்டிபிகேட் வாங்கி வந்தேன்
ஆ)அடையாளச் சான்றிதழ் வாங்கி வந்தேன்
இ)நன்னடத்தைச் சான்றிதழ் வாங்கி வந்தேன்
ஈ)மாற்றுச் சான்றிதழ் வாங்கி வந்தேன்

48.சென்ட்ரல் கவர்ன்மென்ட் - தமிழ்ச்சொல் தருக.
அ)மாநிலஅரசு  
ஆ)மத்திய அரசு
இ)நடுவண் அரசு
ஈ)இந்திய அரசு

49.ஆங்கிலச் சால்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தேர்க - ரெஜிஸ்டர் போஸ்ட்
அ)ரெஜிஸ்டர் தபால்
ஆ)பதிவுத் தபால்
இ)பதிவு அஞ்சல்
ஈ)ரெஜிஸ்டர் கடிதம்

50.ஆங்கிலச் சொல்லுக்கு  இணையான தமிழ்ச்சொல் தேர்க பேக்கிங் சார்ஜ்
அ)கட்டுமானக் கூலி
ஆ)பதிவு வரி
இ)பேக்கிங் கூலி
ஈ)கட்டுமானத் தொகை

51.ஒலி வேறுபாடறிந்து  சரியானவற்றைத் தேர்க
........ மீன் பிடிக்காதே.
அ)எறியில்
ஆ)ஏறியில்
இ)எரியில்
ஈ)ஏரியில்

52.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் தேர்க
தாலி      தாழி    தாளி
அ)நிலம்    ஆழம்    பனை
ஆ)நாக்கு    கடல்    பனை
இ)உண்கலம்  தென்னை காற்று
ஈ)மாங்கல்யம்  குடம்   கொடி

53.ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
அலை     அளை   அழை
அ)நீரலை   ஒளி    கூப்பிடுதல்
ஆ)கடல்    வளை   அழைப்பிதழ்
இ)நீரலை    புற்று    விளி
ஈ)வளை     விளி    ஒளி

54.ஒலி வேறுபாடறிந்து பொருளையறிக
வலி           வளி               வழி
அ)இழு       வளியில்            ஆறு
ஆ)வலிமை    காற்று                    பாதை
இ)இழுத்தல்    வளிதல்            வழிதல்
ஈ)நோய்       ஐம்பூதங்களில் ஒன்று       இடையில்

55.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் தேர்க
விலை         விளை   விழை
அ)கிரயம்      பயன்     நட்பு
ஆ)விற்றல்     உண்டாக்கு விரும்பு
இ)வாங்கு      பழம்      பள்ளம்
ஈ)பொருள்     விளைச்சல்  புணர்ச்சி

56.மை - என்பதன் பொருள் அறிக
அ)செம்மை
ஆ)கருமை
இ)மென்னமை
ஈ)வண்மை

57.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க- போ
அ)பேசுதல்
ஆ)ஒடுதல்
இ)செல்லுதல்
ஈ)நீடத்தல்

58.'கோ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழி குறிக்கும் பொருள்
அ)அரசன்
ஆ)கோயில்
இ)கோபம்
ஈ)கடவுள்

59.ஒரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க - 'கா"
அ)ஒலி
ஆ)கத்துதல்
இ)சோலை
ஈ)காக்கா

60.'ஈ" ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள் தேர்க
அ)கொடுத்தல்
ஆ)வருத்துதல்
இ)காத்தல்
ஈ)இரத்தல்



No comments:

Post a Comment