# இழவு காத்த கிளிபோல – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.
A. வியப்பு
B. மகிழ்ச்சி
C. ஏமாற்றம்
D. அச்சம்
Answer : C.
# கண்டார் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
A. காண்
B. கண்
C. கண்ட
D. கண்டு
Answer : A.
# பிரித்து எழுதுக – நான்மறை
A. நால் + மறை
B. நான்கு + மறை
C. நாட் + மறை
D. நாற் + மறை
Answer : B.
# பிரித்து எழுதுக – நன்னாள்
A. நன்மை + நாள்
B. நன்று + நாள்
C. நல்ல + நாள்
D. நன் + நாள்
Answer : A.
# தலை – பெயர்ச்சொல்லின் வகை அறிக.
A. பொருட்பெயர்
B. இடப்பெயர்
C. பண்புப்பெயர்
D. சினைப்பெயர்
Answer : D.
# பிரித்து எழுதுக : பெருங்குணம்
A. பெரு+குணம்
B. பெருங்+குணம்
C. பெரும்+குணம்
D. பெருமை+குணம்
Answer : D.
# ஏ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A. அழைத்தல்
B. ஏவுதல்
C. அம்பு
D. கூவுதல்
Answer : C.
# எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக:"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்"
A. கட்டளை வாக்கியம்
B. உணர்ச்சி வாக்கியம்
C. செய்தி வாக்கியம்
D. வினா வாக்கியம்
Answer : D.
# உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க: "நனி"
A. மிகுதி
B. குறைவு
C. அதிர்ச்சி
D. அன்பு
Answer : A.
# உவமையால் விளக்கப்படும் பொருள்: "பொதிற்கொள் பூமணம் போல"
A. மணம் வீசுதல்
B. வெளிப்படுதல்
C. மறைந்திருத்தல்
D. இணைதல்
Answer : B.
# உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க: கா
A. காடு
B. சோலை
C. ஆறு
D. கலை
Answer : B.
# ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : முருகு – முறுகு
A. அவயம் – நோக்குதல்
B. அழகு – முதிர்தல்
C. அழகு – சேர்த்தல்
D. அழகு -பார்த்தல்
Answer : B.
# உவமையால் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்க – "கடன் பட்டார் நெஞ்சம் போல்"
A. ஆதரவு
B. ஏமாற்றம்
C. வேதனை
D. பகை
Answer : C.
# புகன்றான் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
A. புகன்
B. புகல்
C. புகு
D. புக
Answer : B.
# எதிர்ச்சொல் தருக – நகை
A. அணிகலன்
B. அச்சம்
C. பெருமிதம்
D. அழுகை
Answer : D.
# ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : பரி – பறி
A. ஆடு – மான்
B. குதிரை – மிகுதி
C. குதிரை – பிடுங்குதல்
D. குதிரை – அன்பு
Answer : C.
# ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : உலவு – உளவு
A. நடமாடு – வேவு
B. உதவு -காப்பாற்று
C. காப்பாற்று – நடமாடு
D. வேவு -பயிர்த்தொழில்
Answer : A.
No comments:
Post a Comment