SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

31.vao exam general knowledge questions & answers

61.எவ்வகை வாககியம் என்க கண்டெழுதுக
'அசோகர் புத்த மதத்தைப் பரப்புவித்தார்"
அ)தன்வினை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்

62.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தோந்தெடு
'குன்றிலிட்ட விளக்குப் போல"
அ)வறுமை
ஆ)புகழ்
இ)நட்பு
ஈ)தீமை

63.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேந்தெடு
"உடுக்கை  இழந்தவன் கை போல"
அ)பகைமை
ஆ)சுற்றம்
இ)துன்பம்
ஈ)நட்பு

64.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
'நாய்க்குத் தேங்காய் கிடைத்தாற் போல"
அ)ஏமாற்றம்
ஆ)பயனின்மை
இ)வருத்தம்
ஈ)தவிப்பு

65.அடி இயைபு காண்க
'பொன்னிகர் மொழிதான் அவருக்குச் சொந்தம் போற்றார் யாரெனினும் அவரும் பந்தம்"
அ)பொன்னிகர் - அவருக்கு
ஆ)பொன்னிகர் - பொற்றார்
இ)சொந்தம் - பந்தம்
ஈ)போற்றார் - அவரும்

66.எதுகை காண்க -'கற்பு"
அ)போற்று
ஆ)தூற்று
இ)பற்று
ஈ)சார்பு

67.'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை" இதில் அமைந்துள்ள எகையைக் காட்டுக
அ)பற்றுக் - அப்பற்றை
ஆ)பற்றற்றான் - அப்பற்றை
இ)பற்றினை - அப்பற்றை
ஈ)பற்றுக - பற்றற்றான்

68.மோனையைக் கண்டறிக கற்பனை வளர்தல் வேண்டும்
கவிநயம் பிறப்பில்  வேண்டும்
அ)கற்பனை - வேண்டும்
ஆ)கவிநயம் - பிறப்பில்
இ)வளர்தல் - கற்பனை
ஈ)கற்பனை - கவிநயம்

69.எதுகைத் தொடையைக் கண்டறிக
'மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்"
அ)மத்தளம் - வரிசங்கம்
ஆ)மத்தளம் - முத்துடை
இ)முத்துடை - நிரை தரழ்ந்த
ஈ)முத்துடை - பந்தற்கீழ்

70.மோனைச் சொல்லை எழுதுக
இன்மையுள் இன்மைவிருந்துஒரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை
அ)இன்மையுள் - இன்மை - வண்மையுள் - வன்மை
ஆ)விருந்து - வன்மை - மடவார் - இன்மை
இ)இன்மை - விருந்து - வன்மை - பொறை
ஈ)வன்மையுள் -மடவார்- ஒரால்-மடவார்

71.'இளமை" - என்ன வகை பெர்ச்சொல்?
அ)பண்புப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)தொழிற்பெயர்

72.இலக்கணக் குறிப்பு தருக
அ)பண்புத்தொகை
ஆ)அடுக்கத் தொடர்
இ)வினையெச்சம்
ஈ)உம்மைத் தொகை

73.'செங்கை"- இலக்கணம் கூறுக
அ)வினைத்தொகை
ஆ)இலக்ணப்போலி
இ)பண்புத்தொகை
ஈ)வினையெச்சம்

74.இலக்கணக் குறிப்பு அறிதல் - 'கண்டனன் வணங்கினான்"
அ)பெயரெச்சம்
ஆ)வினையெச்சம்
இ)முற்றெச்சம்
ஈ)உருபு மயக்கம்

75.இலக்கணக் குறிப்பு அறிதல் - 'திரைக்கை"
அ)உவமைத் தொகை
ஆ)உருவகம்
இ)வினைத்தொகை
ஈ)பண்புத்தொகை

76.'வாழ்க" - இலக்கணக் குறிப்பு தருக
அ)வினைமுற்று
ஆ)வினையெச்சம்
இ)வியங்கோள் வினைமுற்று
ஈ)பெயரெச்சம்

77.'கடிநகர்" என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பெழுதுக
அ)உரிச்சொற்றொடர்
ஆ)வினைத்தொகை
இ)பண்புத்தொகை
ஈ)இடவாகு பெயர்

78.இலக்கணக் குறிப்பு அறிக -'பாவாய்"
அ)உரிச்சொல்
ஆ)உம்மைத்தொகை
இ)விளி வேற்றுமை
ஈ)அன்மொழித்தொகை

79.இலக்கணக் குறிப்பு எழுதுக -'வெள்ளை உழுதது"
அ)பண்பாகு பெயர்
ஆ)காலவாகு பெயர்
இ)இடவாகு பெயர்
ஈ)சினையாகு பெயர்

80.விடைக்குப் பொருந்தும் வினாவைத் தேர்க
'குமரகுருபரர் மதுரைக் கலம்பகம் பாடினார்"
அ)மதுரைக் கலம்பகத்தை ஏன் பாடினார்?
ஆ)மதுரைக் கலம்பகத்தை பாடினாரா குமரகுருபரர்?
இ)யாரால் கலம்பகம் பாப்பட்டது?
ஈ)யார் மதுரைக் கலம்பகத்தைப் பாடினார்?



No comments:

Post a Comment