SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

31.MATHS

602. புள்ளி, கோடு, தளம் ஆகிய மூன்றும் சேர்ந்து வடிவியல் எனப்படுகிறது.
603. * எண்ணிலடங்கா புள்ளிகளின்தொகுப்பை கோடு என்கிறோம்.
604. * ஒரு கோட்டுத்துண்டில் இருமுடிவுப் புள்ளிகள் உள்ளதால் அதற்கு குறிப்பிட்ட நீளம் உண்டு.
605. * மூடிய உருவத்தைப் பெற வேண்டும் எனில் குறைந்தபட்சம் 3 கோட்டுத் துண்டுகள் இருக்க வேண்டும்.
606. * மூன்று கோட்டுத் துண்டுகளால் அடைப்பட்ட (அ) மூடிய உருவத்தை முக்கோணம் என்கிறோம்.
607. * ஒரு முக்கோணத்தின் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்கத்தின் நீளத்தை விட அதிகமாக இருக்கும்.
608. * ஐந்து (அ) ஐந்திற்கு மேற்பட்ட கோட்டுத்துண்டுகளால் உருவாகும் அடைபட்ட உருவத்தினை பலகோணம் என்கிறோம்.
609. * முப்பரிமான வடிவங்கள் என்பது ஒரு தளத்தில் அடைக்க இயலாத வடிவியல் உருவங்கள் ஆகும்.
610. * ஒரே சீரான வளைக்கோட்டினால் ஆன மூடிய வடிவம் வட்டம் ஆகும்.
611. * வடிவங்கள் என்பது சமதள உருவங்கள் ஆகும்.
612. * 2, 5, 10 ஆகிய எண்களின் வகுபடும் தன்மையைக் காண - கடைசி இலக்கத்தை ஆராய வேண்டும்.
613. * நான்கு இலக்க மிகப்பெரிய எண் மற்றும் மிகச்சிறிய எண் இவற்றின் கூடுதல் - 10999
614. * ஒரு உலோகக்கலவையில் 30% தாமிரம், 40% துத்தநாகம், மீதி நிக்கல் உள்ளது எனில் 20 கி.கி உலோகக்கலவையில் உள்ள நிக்கலின் அளவு - 6 கி.கி.
615. * இராஜூ ரூ.36000 க்கு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி அதன் தோற்றப்பொலிவு நன்கு அமையவும், நல்லமுறையில் இயங்கவும் சில பாகங்களைப் பொருத்தி அதனை * 10% இலாபத்திற்கு ரூ.44000 விற்றார் எனில் அவர் செய்த இதர செலவினத் தொகை - 4000
616. * 6 ஆட்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் செய்து 24 நாட்களில் முடிப்பர். 9 ஆட்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் வேலை முடிய ஆகும் நாட்கள் - 20
617. * "மூன்று வாங்கினால் ஒன்று இலவசம்" என்ற தள்ளுபடி விற்பனையில் அளிக்கப்படும் தள்ளுபடி சதவீதம் - 33.33
618. * 68, 75, 70, 62, 75, 71, 69 இவ்விவரங்களுக்கு சராசரி மற்றும் இடைநிலை சமம். சரியா? தவறா? - சரி
619. * ஒரு தனியார் நிறுவனம் தனது விளம்பர அறிக்கையில் அவர்களது சேவையானது சராசரியாக 99% வாடிக்கையாளர்களால் மிகவும் திருப்திகரமாக உள்ளது என தெரிவித்துள்ளனர் என அறிவிக்கிறது எனில் அவ்வறிக்கையில் குறிப்பிட்ட  மையப்போக்கு அளவு - முகடு
620. * 10 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவு (மி.மீ. ல்) பின்வருமாறு: 0.8, 1.5, 4.2, 0.8, 0.8, 3.2, 2.5, 1.5, 0.2, 4.4 இவ்விவரங்களிலிருந்து * மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய மதிப்பினை நீக்கிவிட்டால் சராசரி மாற்றமடையும் ஆனால் இடைநிலை, முகடு மாறாது. சரியா? தவறா? - சரி




No comments:

Post a Comment