21.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை அறிந்து எழுதுக - 'நா"
அ)நாடு
ஆ)நாக்கு
இ)நாவன்மை
ஈ)நாடகம்
22.'வீ" என்பதன் பொருள்
அ)சருகு
ஆ)காய்
இ)கனி
ஈ)மலர்
23.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் - 'நடந்தான்"
அ)ஒடு
ஆ)ஆடு
இ)கட
ஈ)நட
24.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் - 'வந்தன"
அ)அடி
ஆ)வா
இ)மடி
ஈ)இடி
25.வேர்ச்சொல்லைக் கண்டு எழுதுக - 'செத்தான்"
அ)செத்து
ஆ)செத்த
இ)சா
ஈ)செ
26.'கண்டனர்" - என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
அ)காண்க
ஆ)காண்
இ)காணுதல்
ஈ)கண்டு
27.'வருதல்" என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க
அ)வரு
ஆ)வருக
இ)வர்
ஈ)வா
28.'எழு" - என்பதன் வினையாலணையும் பெயர்
அ)எழுந்தான்
ஆ)எழுந்தவன்
இ)எழுகின்றான்
ஈ)எழுவான்
29.'வாழ்" என்னும் வேர்ச்சொல்லை உடைய வினையெச்சம்
அ)வாழ்ந்த
ஆ)வாழ்ந்து
இ)வாழ்ந்தான்
ஈ)வாழ்க
30.கொடுக்கப் பெற்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவாக்கப் பெற்ற வினைமுற்றைக் கண்டு எழுதுக - 'காண்"
அ)கண்ட
ஆ)கண்டு
இ)கண்டான்
ஈ)காணா
31.பிழை அற்ற சொல்லைத் தேர்க
அ)சுவற்றில்
ஆ)அருகில்
இ)அண்ணா கயிறு
ஈ)மொறம்
32.மரபுப் பிழை நீக்கிய சொற்களைத் தேர்க
அ)குதிரைக் கொட்டில் கோழிப்பட்டி
ஆ)கோழிப்பாண்ணை குதிரைக் கூடம்
இ)குதிரைப் பண்ணை,குதிரைக் கொட்டில்
ஈ)கோழிப் பண்ணை,குதிரைக் கொட்டில்
33.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் தேர்க
அ)பஜாரில் பழம் வாங்கினேன்
ஆ)கடைத்தெருவில் பழம் வாங்கினேன்
இ)பசாரில பழம் வாங்கினேன்
ஈ)பஷாரில் பழம் வாங்கினேன்
34.பிறமொழிச் சொற்கள் இல்லாத வாக்கியம் எது?
அ)பஸ் பாஷ்டா போவுது
ஆ)தபாலாபீஸ் எங்குள்ளது?
இ)உணவு விடுதியில் உண்ணுவது உடலுக்குக் கேடு
ஈ)கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்
35.பிறமொழிச் சொற்கள் கலவாதத் தொடரைத் தேர்க
அ)சந்தேகப்பட்டால் கஷ்டம் வரும்
ஆ)ஜயமென்றால் கஷ்டம் வரும்
இ)சந்தேகப்பட்டால் தொல்லை வரும்
ஈ)ஜயப்பட்டால் தொல்லை வரும்
36.பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடரைக காண்க
அ)அலுவலகத்தில் அக்கிரமம் நடக்கிறது
ஆ)அலுவலகத்தில் அநியாயம் நடக்கிறது
இ)அலுவலகத்தில முறைகேடு நடக்கிறது
ஈ)அலுவலகத்தில் அட்டுழியம் நடக்கிறது
37.பிறமொழிச் சொற்களை நீக்குதல் எனக்கு ஆஸ்தி நிறைய உள்ளது
அ)சொத்து
ஆ)நிலபுலம்
இ)வீடுகள்
ஈ)வருமானம்
38.பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக அலைவ் (Alive)
அ)உயிரற்ற
ஆ)உயிருள்ள
இ)ஒருயிரான
ஈ)வாழ்க்கை
39.பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லைத் தருக.'ஸ்பீட் பிரேக்கர்"
அ)வேகமான நிறுத்தம்
ஆ)வேக உடைப்பி
இ)வேகத்தடை
ஈ)வெகமான தடை
40.பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக
'ஒனரிடம் அக்ரீமெண்டு செய்தான்"
அ)சொந்தக்காரரிடம் ஒப்பந்தம் செய்தான்
ஆ)உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்தான்
இ)ஒனரிடம் உரிமை செய்தான்
ஈ)உரிமையாளரிடம் சம்மதம் செய்தான்
No comments:
Post a Comment