SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

28.tnpsc questions in tamil

541. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் (பாரதிதாசன்)
542. 'கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்' என்று பாடியவர் (பாரதிதாசன்)
543. வாணிதாசன் பிறந்த ஊர் (வில்லியனூர்)
544. வாணிதாசனின் இயற்பெயர் (அரங்கசாமி என்ற எத்திராசலு)
545. பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்ற கவிஞர் (வாணிதாசன்)
546. தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி வெளியிட்டவர் (வாணிதாசன்)
547. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரிடம் செவாலியர் விருது பெற்றவர் (வாணிதாசன்)
548. பாவலர்மணி, கவிஞரேறு முதலான பட்டங்கள் பெற்றவர் (வாணிதாசன்)
549. வாணிதாசன் பாடல்களில் சிறந்து விளங்குவது (இயற்கை)
550. தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த் எனப் பாராட்டப்படுபவர் (வாணிதாசன்)
551. 'காடு' என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் (எழிலோவியம்)
552. இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள், பிரிந்தால் பொருளில்லை – எனப் பாடியவர் (சுரதா)
553. பாரதிதாசனின் தலை மாணாக்கர் (சுரதா)
554. சுரதா பிறந்த ஊர் (பழையனூர்)
555. சுரதாவின் இயற்பெயர் (இராச கோபாலன்)
556. சுரதா நூல்களுள் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்ற நூல் (தேன்மழை)
557. உவமைக் கவிஞர் எனப் பாராட்டப் பட்டவர் (சுரதா)
558. தமிழக அரசு வழங்கிய பாவேந்தர் நினைவுப் பரிசினைப் பெற்ற முதல் புலவர் (சுரதா)
559. மனிதநேயம் என்னும் பாடல் இடம் பெற்ற நூல் (நல்ல உலகம் நாளை மலரும்)
560. இமயம் எங்கள் காலடியில் என்னும் நூலின் ஆசிரியர் (ஆலந்தூர் கோ.மோகனரங்கன்)




No comments:

Post a Comment