521. முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை (சிந்து)
522. முக்கூடற்பள்ளின் ஆசிரியர் (பெயர் தெரியவில்லை)
523. சைவ வைணவங்களை ஒன்றிஒணைக்கும் நூல் (முக்கூடற்பள்ளு)
524. இலக்கிய மறுமலர்ச்சி9 யாருடைய காலத்தில் இருந்து தொடங்குகிறது (பாரதியார்)
525. 'மாலைக்கால வருணனை' இடம்பெற்றுள்ள நூலின் பெயர் (பாஞ்சாலி சபதம்)
526. மாலைக்கால வருணனை யார் யாரிடம் கூறியது (அர்ச்சுனன் பாஞ்சாலியிடம்)
527. வடமொழியில் பாரதம் இயற்றியவர் (வியாசர்)
528. பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்கள் (ஐந்து)
529. மாலைக்கால வருணனை பாஞ்சாலி சபதத்தில் _____________ சருக்கத்தில் அமைந்துள்ளது. (அழைப்புச் சருக்கம்)
530. 'நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்' எனப் பாடியவர் (பாரதியார்)
531. பாரதியார் பிறந்த ஊர் (எட்டயபுரம்)
532. 'பாரதி' என்னும் சொல்லின் பொருள் (கலைமகள்)
533. 'தமிழ்நாட்டில் தமிழ்ப்புலவன் ஒருவன் இல்லையென்னும் வசை நீங்க' வந்து தோன்றியவர் (பாரதியார்)
534. பாட்டுத் திறத்தால் இந்த வையத்தைப் பாலித்திடச் செய்தவர் (பாரதியார்)
535. 'தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்' என்று சொன்னவர் (பாரதியார்)
536. 'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' எனச் சொன்னவர் (பாரதியார்)
537. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் (பாரதியார்)
538. பாரதியார் எழுதிய உரைநடை நூல் (ஞானரதம், தராசு)
539. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' எனப் பாடியவர் (பாரதியார்)
540. 'சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே' எனப் பாடியவர் (பாரதியார்)
❤️
ReplyDelete