SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

24.9-ஆம் வகுப்பு | தமிழ்

971. 9-ஆம் வகுப்பு | தமிழ் |    பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கு முதற்காரணமாய் இருப்பதால் அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முதலெழுத்துகள்
972.    9-ஆம் வகுப்பு | தமிழ் |முதல் எழுத்துகள் எத்தனை?
முப்பது ("" முதல் "ஒள" வரை 12-ஆம், "க்" முதல் "ன்" வரை 18-ஆம்)
973.    9-ஆம் வகுப்பு | தமிழ் |முதல் எழுத்துகளைச் சார்ந்து இயங்கும் எழுத்துகள் ______ எனப்படும்.
சார்பெழுத்துகள்
974.    9-ஆம் வகுப்பு | தமிழ் |சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பத்து, அவை. 1.உயிர்மெய், 2.ஆய்தம், 3.உயிரளபெடை, 4.ஒற்றளபெடை, 5.குற்றியலிகரம், 6.குற்றியலுகரம், 7.ஐகாரக் குறுக்கம், 8.ஒளகாரக் குறுக்கம் 9.மகரக்குறுக்கம்
        10.ஆய்தக் குறுக்கம்
975.    9-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளில் ஓசை குறையும்போது ஒரு சொல்லின் முதலிலும், இடையிலும், இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிக்கும் அவ்வாறு நீண்டு ஒலிப்பதை _______ என்பர்.
அளபெடை
976.    9-ஆம் வகுப்பு | தமிழ் |அளபெடை எத்தனை வகைப்படும்?  
இரண்டு
977.    9-ஆம் வகுப்பு | தமிழ் |உயிரளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
மூன்று. அவை. செய்யுளிசை, இன்னிசை, சொல்லிசை அளபெடைகள்.
978.    9-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளில் இசையை நிறைக்க வரும் அளபெடை _______ எனப்படும்.
செய்யுளிசை அளபெடை
979.    9-ஆம் வகுப்பு | தமிழ் |ஓசை குறையாவிட்டாலும், இனிய ஓசைக்காக அளபெடுத்தலை _______ என்பர்.
இன்னிசை அளபெடை
980.    9-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு சொல் மற்றொரு சொல்லாகப் பொருள்படவரும் அளபெடை _______ என்பர்.
சொல்லிசை அளபெடை
981.    9-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளிசை அளபெடையின் வேறுபெயர் என்ன?
இசை நிறை அளபெடை
982.    9-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளி;ல் ஓசை குறைந்தால் மெய் எழுத்துகளும் அளபெடுக்கும், அவை _______ எனப்படும்.
ஒற்றளபெடை
983.    9-ஆம் வகுப்பு | தமிழ் |"உறாஅர்க் குறுநோய் உரைப்பாய்இத்தொடரில் _______ அளபெடை வந்துள்ளது.
செய்யுளிசை அளபெடை
984.    9-ஆம் வகுப்பு | தமிழ் |"உடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்குஇக்குறட்பாத் தொடரில் _______  அளபெடை வந்துள்ளது.
இன்னிசை அளபெடை
985.    9-ஆம் வகுப்பு | தமிழ் |"வரனசைஇ இன்னும் உள்ளேன்" - இத்தொடரில்_______ அளபெடை வந்துள்ளது.
சொல்லிசை அளபெடை
986.    9-ஆம் வகுப்பு | தமிழ் |எழுத்துக்களின் பிறப்பை எத்தனை வகையாகப் பிரிப்பர்?
இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு
987.    9-ஆம் வகுப்பு | தமிழ் |எழுத்துக்கள் தோன்றுகின்ற மார்பு முதலானவற்றை _______ என்பர்.
இடப்பிறப்பு
988.    9-ஆம் வகுப்பு | தமிழ் |உதடு முதலான உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதை _______ என்பர்.
முயற்சிப் பிறப்பு
989.    9-ஆம் வகுப்பு | தமிழ் |ஒலி எழக் காரணமான காற்று நிலைபெறும் இடங்களை _______ என்பர்.
காற்றறைகள்
990.    9-ஆம் வகுப்பு | தமிழ் |ஒலி எழுவதற்குத் துணை செய்யும் உறுப்புகளை _______ என்பர்.
ஒலிப்புமுனைகள்



No comments:

Post a Comment