441. கண்ணகியின் தந்தை பெயர் (மாசாத்துவான்)
442. கோவலனின் தந்தை பெயர் (மாநாய்கன்)
443. மாதவி என்னும் ஆடல்மகள் -------------- என்ற பட்டம் பெற்றவள். (தலைக்கோலரிவை)
444. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண்ணின் பெயர் (மணிமேகலை)
445. கம்பராமாயணத்தை இயற்றியவர் (கம்பர்)
446. தாம் இயற்றிய இராமகாதைக்குக் கம்பர் இட்ட பெயர் (இராமவதாரம்)
447. வடமொழியில் இராமாயணம் இயற்றியவர் (வான்மீகி)
448. ஆதிகாவியம் என்று அழைக்கப்படும் நூல் (இராமாயணம்)
449. 'ஆதிகவி' என்று அழைக்கப்படக் கூடியவர் (வான்மீகி)
450. கம்பநாடகம், கம்பசித்திரம் என அழைக்கப்படும் நூல் (கம்ப இராமாயணம்)
451. கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு (96)
452. கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (ஆறு)
453. உத்தரகாண்டத்தைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
454. சுந்தரகாண்டம் இராமாயணத்தில் --------- ஆவது காண்டம் (ஐந்தாவது)
455. இராமாயணத்தில் முடிமணியாக விளங்கும் காண்டம் (சுந்தரகாண்டம்)
456. சிறியதிருவடி என்று அழைக்கப்படக் கூடியவர் (அனுமன்)
457. சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் (அனுமன்)
458. சீதையை அனுமன் கண்டது ---------- என்னும் இடத்தில் (அசோகவனம்)
459. 'தனயை' என்னும் சொல்லின் பொருள் (மகள்)
460. இராமன் கொடுத்ததாக அனுமன் சீதையிடம் காட்டியது (கணையாழி)
No comments:
Post a Comment