951. 9-ஆம் வகுப்பு | தமிழ் | வட திராவிட மொழிகள் யாவை?
குரூக், மால்தோ, பிராகுய்
952. 9-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திராவிடப் பெருமொழிகள்
953. 9-ஆம் வகுப்பு | தமிழ் |"திராவிடம்" என்பதன் பொருள் யாது?
திராவிட நாடு
954. 9-ஆம் வகுப்பு | தமிழ் | "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் நூலின் ஆசிரியர் யார்?
கால்டுவெல்
955. 9-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழையும் அதன் கிளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளை எவ்வாறு அழைத்தனர்?
தமிளியன் அல்லது தமுலிக்
956. 9-ஆம் வகுப்பு | தமிழ் |அழிந்து வரும் பண்டையத் தமிழ் ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்துப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எது மேற்கொண்டு வருகிறது?
யுனெஸ்கோ நிறுவனம்
957. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கடல் கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டம் எது?
இலெமூரியாக்கண்டம்
958. 9-ஆம் வகுப்பு | தமிழ் |"திராவிட" எனும் சொல் எந்த சொல்லிலிருந்து உருவானது?
தமிழ்
959. 9-ஆம் வகுப்பு | தமிழ் |"திராவிட" என்ற சொல் "தமிழ்" என்ற சொல்லிலிருந்து உருவானதாக கூறிய மொழியியல் அறிஞர் யார்?
ஈராஸ் பாதிரியார்
960. 9-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் மொழியில் இன்று நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழமையானது எது?
தொல்காப்பியம்
961. 9-ஆம் வகுப்பு | தமிழ் |"எண்பது விழுக்காடு" அளவிற்குத் திராவிட மொழிக் கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி எது?
தமிழ்
962. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நம் தாய் மொழியாம் தமிழ் எவ்வாறு ஒளிர்கிறது?
நம் தாய்மொழியாம் தமிழ் செவ்வியல் மொழியாய் ஒளிர்கிறது
963. 9-ஆம் வகுப்பு | தமிழ் |பிற மொழிகள் தோன்றி வளர அடிப்படையாகும் மொழி எது?
மூலமொழி
964. 9-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு மூலமொழியிலிருந்து தோன்றி வளரும் மொழியை _______ என்பர்.
கிளைமொழி
965. 9-ஆம் வகுப்பு | தமிழ் |பாரதிதாசன் எவற்றைச் சாடினார்?
மூடநம்பிக்கையை
966. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உரைநடைக் காலம் என்று எந்த நூற்றாண்டைக் கூறுகிறோம்?
இருபதாம் நூற்றாண்டு
967. 9-ஆம் வகுப்பு | தமிழ் |மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துவது எது?
மொழி
968. 9-ஆம் வகுப்பு | தமிழ் |மொழியைப் பிழையின்றிப் பேசவும் கேட்கவும் கற்கவும் எழுதவும் துணை செய்வது எது?
இலக்கணம்
969. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழிலக்கணம் எத்தனை வகைப்படும்?
ஐந்து. அவை, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி இலக்கணங்களாகும்.
970. 9-ஆம் வகுப்பு | தமிழ் |எழுத்துக்களின் வகைகள் யாவை?
முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படும்.
No comments:
Post a Comment