SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

20.tamil material

301. # ஒரு சொல் உயிரெழுத்தில் துவங்கி, உயிரெழுத்தில் முடியும்.
302. # மெய்யெழுத்தில் தொடங்காது, ஆனால் மெய்யெழுத்தில் முடியும்.
303. # உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும், ஆனால் உயிர்மெய்யில் முடியாது.
304. # மெய்யெழுத்தில் க், ச், த், ப் என்னும் நான்கும் தம்முடன் தாமே மயங்கும் எழுத்துக்களாகும்.
305. # போல இருத்தல் என்பதே போலி. இது முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என மூன்று வகைப்படும்.
306. # சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது முதற்போலி.
307. # சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது இடைப்போலி.
308. # ஒட்டுநிலை என்பது தனிநிலை சொற்களோடு வேறு வேறு உறுப்புக்கள் சேர்ந்து சொற்களாவது. உதாரணம் : அறி = அறிந்தான், அறிஞன்
309. # உட்பிணைப்பு நிலை என்பது, ஒரு சொல்லோடு இன்னொரு சொல் சேர்ந்து பகுதி, விகுதி என்று பிரிக்க முடியாது பிணைந்து பிறிதொரு சொல்லாக மாறுவது. உதாரணம் : கோவன்-புத்தூர் = கோவைதி ன மணி
310. # உயர்ந்த குலமும், சிறந்த ஒழுக்கமும், பகுத்தறிவும் படைத்த இனப்பொருட்களை உயர்திணை என்பர்.
311. # உயிருள்ள பொருட்களையும், உயிர் இல்லாப் பொருட்களையும் அக்றிணை எனக் கூறுவர்.
312. # இரு திணைகளிலும் அடங்கிய உலகத்துப் பொருட்களை ஐம்பால்களாகப் பிரிக்கலாம்.
313. # பால் என்பதற்கு பகுப்பு எனப் பொருளுண்டு.
314. # பால் ஐந்து வகைப்படும், அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
315. # உயர்திணைக்கு உரிய பால்கள் : ஆண்பால், பெண்பால், பலர்பால்
316. # அக்றிணைக்கு உரிய பால்கள் : ஒன்றன்பால், பலவின்பால்
317. # தமிழ் இலக்கணம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
318. # தமிழில் முதலெழுத்து என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்து என இருவகைப்படும்.
319. # ஒன்றினை சுட்டிக் காட்ட வரும் எழுத்திற்குச் சுட்டெழுத்து என்று பெயர்.
320. # சொற்களின் உள்ளே சுட்டெழுத்து அடங்கி வந்தால் அது அகச்சுட்டு.



No comments:

Post a Comment