SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

16.தமிழ் இலக்கியம்

301.விநாயகர் அகவல் - பாடியவர் யார்?
ஒளவையார்
302.கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் என்ன?
இராமாவதாரம்
303.வச்சணந்தி மாலைக்கு வழங்கும் வேறு பெயர் என்ன?
வெண்பாப் பாட்டியல்
304.இராமதேவர் - இக்கல்வெட்டு யாரைக் குறிப்பிடுகிறது?
சேக்கிழாரை
305.கைந்நிலை பாடியவர் யார்?
புல்லங்காடனார்
306.பாரதப் போரின் போது உணவு வழங்கியவன் யார்?
பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்
307.யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய எனப் பாடிய மன்னன் யார்?
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
308.மாசில் வீணையும் என்று தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
திருநாவுக்கரசர்
309.சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் யார்?
சிவபெருமான்
310.சைவக் குரவர் எத்தனை பேர்?
நான்கு
311.குண்டலகேசி எத்தனை பாடல்களைக் கொண்டது?
சீவகசிந்தாமணி
312.மணநூல் எனப் பெயர் பெற்ற காப்பியம் எது?
பெருங்கதை
313.கொங்குவேள் மாக்கதை என்ப்படும் நூல் எது?
பெருங்கதை
314.மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எதுஃ
திருவாதவூர்
315.சூடிக்கொடுத்த சுடர்க் கொடி எனப்படுபவர் யார்?
ஆண்டாள்
316.அகமா? புறமா? என்ற கேள்விக்குக் காரணமாக அமையும் நெடுநல்வாடைப் பாடல் வரி எது
வேம்பு தலையாத்த நோன் காழ் எஃகம்
317.வேலினும் வெய்ய கானம் அவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே என்று கூறும் நூல் எது?
பட்டினப்பாலை
318.முத்தரையர்கள் என்னும் குறநில மன்னர்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?
நாலடியார்
319.திருநாவுக்கரசரின் தமக்கையார் பெயர் என்ன?
திலகவதியார்
320.சுந்தரர் மணந்துகொண்ட இரு பெண்களின் பெயர்கள் யாவை?
பரவையார் (கமலினி) சங்கிலியார்(அநிந்திகை)



No comments:

Post a Comment