239. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க. வின் பெற்றோர் யாவர்?
விருத்தாசலனார் - சின்னம்மையார்
240. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.கலியாண சுந்தரனார் பிறந்த ஊர் எது?
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம்.
241. 7-ஆம் வகுப்பு | தமிழ் |"துள்ளம்" என்ற ஊர் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தண்டலம்.
242. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க வின் தமிழ் நடையைப் போற்றித் ______ எனச் சிறப்பிக்கப்படுகிறார்.
தமிழ்த்தென்றல்
243. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க வின் படைப்புகள் யாவை?
• மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
• பெண்ணின் பெருமை
• தமிழ்த்தென்றல்
• உரிமை வேட்கை
• முருகன் அல்லது அழகு
• நாயன்மார் வரலாறு.
244. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க வாழ்ந்த காலகட்டம் எது?
26.08.1883 - 17.09.1953
245. 7-ஆம் வகுப்பு | தமிழ் |"போற்றி" என்ற வாழ்த்துப்பாடல் திரு.வி.க வின் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது?
பொதுமை வேட்டல்
246. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பொதுமை வேட்டல் என்ற நூலில் எத்தனை பாக்கள் உள்ளன?
430 பாக்கள்
247. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க. சென்னை இராயப்பேட்டையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்?
வெஸ்;லி
248. 7-ஆம் வகுப்பு | தமிழ் | திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் யாவை?
முதற்பாவலர், நான்முகனார்
மாதானுபங்கி, பெருநாவலர்
249. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?
107 மொழிகளில்
250. 7-ஆம் வகுப்பு | தமிழ் | குறள் வெண்பாக்களால் ஆன நூல் எது?
திருக்குறள்.
251. 7-ஆம் வகுப்பு | தமிழ் | உலக மொழிகளில் சிறந்தது ______ மொழியே என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தமிழ்
252. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் ______ எனப்படும்.
செம்மொழிகள்
253. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றை செம்மொழிகள் எனப் பட்டியலிடும் மொழியியல் அறிஞர் யார்?
ச.அகத்தியலிங்கம்
254. 7-ஆம் வகுப்பு | தமிழ் | "தமிழ் மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு, திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்: தமிழ் என்னை ஈர்த்தது: குறளோ என்னை இழுத்தது" என்று கூறி இன்புற்றவர் யார்?
டாக்டர் கிரௌல்
255. 7-ஆம் வகுப்பு | தமிழ் |உலகின் மிகப் பழமையான நிலப்பகுதியான குமரிக் கண்டத்தில் தமிழ் தோன்றியதென எந்த மேற்கோள் செய்யுள் கூறுகிறது?
தண்டியலங்காரம்
256. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பெற்றோரைக் குறிக்கும் எந்த சொற்கள் வட மொழி உட்பட உலகப் பெரு மொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன?
அம்மை, அப்பன்
257. 7-ஆம் வகுப்பு | தமிழ் |"தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத் தோங்கவும் செய்யும்" என்று கூறியவர் யார்?
கால்டுவெல்
258. 7-ஆம் வகுப்பு | தமிழ் |முதற்சங்கத்திலிருந்தே எதுவும் இயற்றமிழோடு இணைந்து முத்தமிழென வழங்கி வரலாயிற்று?
இசையும் நாடகமும்
259. 7-ஆம் வகுப்பு | தமிழ் |"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பது எந்த நூற்பா ஆகும்?
தொல்காப்பியம்
260. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழில் எதற்கு மட்டுமே பால் வேறுபாடு உண்டு: பொருள்களுக்குப் பால் வேறுபாடு இல்லை?
உயிர்களுக்கு
No comments:
Post a Comment