SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

13.6-ஆம் வகுப்பு | தமிழ்

221.    6-ஆம் வகுப்பு | தமிழ் | "கபாலீச்சுரம்" என்னும் சிவாலயம் எங்கு உள்ளது?
மயிலாப்பூர்
222.    6-ஆம் வகுப்பு | தமிழ் | "ஊரும் பேரும்" என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்? 
ரா.பி. சேதுப்பிள்ளை
223. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    சிறந்த ஊர்களை குறிக்கும் சொல் எது? 
புரம்.
224.    6-ஆம் வகுப்பு | தமிழ் | கடற்கரையில் உருவாகும் நகரங்கள் எவ்வாறு பெயர் பெற்றது?
பட்டினம்.
225. 6-ஆம் வகுப்பு | தமிழ் |    கடற்கரை சிற்றூர் எவ்வாறு பெயர் பெற்றது? 
பாக்கம்
226.    6-ஆம் வகுப்பு | தமிழ் | "புலம்" என்ற சொல் எதைக் குறிக்கும்? 
நிலம்
227.    6-ஆம் வகுப்பு | தமிழ் | நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் எவ்வாறு பெயர் பெற்றன? 
குப்பம்.
228.    6-ஆம் வகுப்பு | தமிழ் | எழுத்துக்களின் ஒலியின் அளவைக் குறிக்கும் சொல்லுக்கு பெயர் என்ன? 
மாத்திரை
229.    6-ஆம் வகுப்பு | தமிழ் | எண் எத்தனை வகைப்படும்? அவை யாவை? 
இரண்டு, அவை ஒருமை, பன்மை
230.    6-ஆம் வகுப்பு | தமிழ் | இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? 
மூன்று. அவை தன்மை, முன்னிலை, படர்க்கை
231.    6-ஆம் வகுப்பு | தமிழ் | "குற்றாலக் குறவஞ்சியின்" ஆசிரியர் யார்? 
திரிகூட இராசப்பக்கவிராயர்
232.    6-ஆம் வகுப்பு | தமிழ் | "மரமும் பழைய குடையும்" என்ற சிலேடைப் பாடலைப் பாடியவர் யார்? 
அழகிய சொக்கநாதப் புலவர்
233.    6-ஆம் வகுப்பு | தமிழ் | அழகிய சொக்கநாதப் புலவர் எங்கு பிறந்தார்? 
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் பிறந்தவர்.
234.    6-ஆம் வகுப்பு | தமிழ் | அழகிய சொக்கநாதப் புலவர் எத்தனை தனிப்பாடல்கள் பாடியுள்ளார்? 
25 மேற்பட்; பாடல்கள் பாடியவர்
235.    6-ஆம் வகுப்பு | தமிழ் | அழகிய சொக்கநாதப்புலவர் வாழ்ந்த நூற்றாண்டு எது? 
கி.பி. 19 -ஆம் நூற்றாண்டு
236.    6-ஆம் வகுப்பு | தமிழ் | ஒரு சொல்லோ, தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது              ______ எனப்படும். 
சிலேடை
237.    6-ஆம் வகுப்பு | தமிழ் | "சிலேடை" - எவ்வாறு அழைப்பர்? 
இரட்டுற மொழிதல்
238.    6-ஆம் வகுப்பு | தமிழ் | சொற்கள் இணைந்து எதை உருவாக்குகின்றன? 
சொற்றொடர்



No comments:

Post a Comment