201. # வெள்ளை துத்தம் எனப்படுவது – ஜிங்க் சல்பேட் ZnSO4
202. # உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் – ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
203. # ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.
204. # காஸ்டிக் சோடா எனப்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு
205. # தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது – செல்லுலோஸ்
206. # ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவரில் லிக்னின் காணப்பபடுகிறது.
207. # வரித்தசை நார்களின் மேலுறை – சார்கோலெம்மா எனப்படும்.
208. # தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் உயிரிகள் – உற்பத்தியாளர்கள் எனப்படும்.
209. # அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம்-சூரியன்
210. # உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை – தாவரங்கள்
211. # நரம்பு திசுவின் உடல் பகுதி – சைட்டான் எனப்படும்.
212. # கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வன விலங்கு பாதுகாப்பகம் – நீலகிரி வன விலங்கு பாதுகாப்பகம்.
213. # நிலம், நீர், காற்று மற்றும் உயிரிகளின் தொகுப்பு உயிரிக்கோளம் எனப்படும்.
214. # தொழிற்சாலை திண்மக் கழிவுகளை காற்றில்லா சூழலில் சிதைத்தல் முறையில் சிதைக்கலாம்.
215. # மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி – வன்கட்டை எனப்படும்.
216. # மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது-மண்புழு உரம்
217. # இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள்-சின்னமால்டிஹைடு
218. # வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது – அனிராய்டு பாரமானி
219. # எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம் – ஏலக்காய்
220. # சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு – புளோயம்
No comments:
Post a Comment