201. 6-ஆம் வகுப்பு | தமிழ் | மேரி கியூரி எந்த ஆண்டு காலமானார்?
1934-ஆம் ஆண்டு.
202. 6-ஆம் வகுப்பு | தமிழ் | மேரி கியூரின் மகள் மற்றும் மருமகன் யாவர்?
மகள் ஐரின், மருமகன் ஜோலியாட் கியூரி
203. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஐரின், ஜோலியாட் கியூரி தம்பதிகளின் செயற்கைக் கதிர்;வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றனர்?
கி.பி. 1935-ஆம் ஆண்டு.
204. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திணை எத்தனை வகைப்படும்?; அவை யாவை?
இரண்டு, அவை, அஃறிணை, உயர்திணை
205. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா"? யார் பாடிய பாடல்?
இராமச்சந்திரக்கவிராயர்
206. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "பகுத்தறிவுக் கவிராயர்" என தமிழக மக்களால் அழைக்கப்பட்டவர் யார்?
உடுமலை நாராயணகவி
207. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உடுமலை நாராயணகவி வாழ்ந்த காலம் என்ன?
25.9.1899 முதல் 23.5.1981 வரை
208. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "டிவி" என்ற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் எது?
தொலைக்காட்சி
209. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "ரேடியோ" என்ற சொல்லின் தமிழ்ச் சொல் எது?
வானொலி
210. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "டீ" என்ற சொல்லுக்கு தமிழ்ச் சொல் எது?
தேநீர்
211. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "கரண்ட்" என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்; சொல் எது?
மின்சாரம்.
212. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "ஃபேன்" என்ற சொல்லுக்கு சரியான தமிழ்ச்; சொல் எது?
மின் விசிறி
213. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "சேர்" என்ற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் எது?
நாற்காலி
214. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "தம்ளர்" என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?
குவளை
215. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "சைக்கிள்" என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?
மிதிவண்டி
216. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "பிளாட்பாரம்" என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?
நடை பாதை
217. 6-ஆம் வகுப்பு | தமிழ் | "ஆபிஸ்" என்ற சொல்லின் சரியான தமிழ்ச்சொல் எது?
அலுவலகம்
No comments:
Post a Comment